கோவக்காய் சட்னி செய்முறை | Kovakkai chutney recipe in tamil

கோவக்காய் சட்னி செய்முறை | Kovakkai chutney recipe in tamil

Qries

– Advertisement –

வேலியோரங்களில் பரவலாக காய்க்கக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கோவைக்காய். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த கோவைக்காய் பழத்தை அப்படியே எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கும் விரும்பாத ஒரு காய்கறியாக இந்த கோவைக்காய் திகழ்கிறது. அப்படிப்பட்ட கோவைக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆந்திராவின் புகழ்பெற்ற கோவைக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
கோவைக்காயில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவைக்காய் பெரிதும் துணை புரிகிறது. உடல் பருமனை தடுத்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் இது உதவுகிறது. மேலும் மலக்கட்டு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. உடல் சோர்வை தவிர்த்து சுறுசுறுப்பை தரக்கூடியதாகவும் இந்த கோவைக்காய் திகழ்கிறது.
– Advertisement –

தேவையான பொருட்கள்

கோவைக்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2 ,
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 12
மிளகு – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 4
கருவேப்பிலை – ஒரு கொத்து
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயை குறைந்த தீயில் வைத்து ஏழு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும். தக்காளி லேசாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதை அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.
மறுபடியும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வேர்க்கடலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் மிளகு சீரக பொருட்களை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் வதக்கி வைத்திருக்கும் கோவைக்காயை போட்டு அதிலும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதையும் அரைத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போன்றவற்றை சேர்த்து நாம் முதலில் அரைத்து வைத்த மிளகு, சீரக விழுதை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கோவைக்காய் விழுதையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். இந்த சட்னியை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கும் போட்டு நாம் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே முருங்கைக் கீரை குழம்பு செய்முறை
பல அற்புத சத்து மிகுந்த கோவைக்காயை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள் என்னும் பட்சத்தில் இந்த முறையில் சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top