– Advertisement –
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சில பொருட்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் அது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதை தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதை நாம் மறந்துததால் தான் இன்றைய காலத்தில் பலரும் இளம் வயதிலேயே மூட்டு வலி, முடி உதிர்வு, இதய நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு இலையைப் பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பல இடங்களில் வேலி ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கக்கூடியது தான் இந்த முடக்கத்தான் கீரை. இந்த கீரையை பறித்து நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் ஏற்படும். இந்த கீரையின் பெயரே முடக்கத்தான் கீரை. அதாவது முடக்கு அறுத்தான் கீரை. முடக்கு என்றால் முடங்கிப் போவது. யார் ஒருவரால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிமையாக போக முடியாமல் முடங்கி கிடக்கிறார்களோ அவர்களுடைய முடக்கத்தை நீக்குவதற்குரிய அற்புதமான மருந்து என்பதால் தான் இதற்கு முடக்கறுத்தான் கீரை என்று கூறினார்கள்.
– Advertisement –
இந்தக் கீரையை நாம் அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து நம்முடைய தலையில் நன்றாக தேய்ப்பதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய பொடுகு தொல்லை நீங்கும். மேலும் ஆங்காங்கே திட்டு திட்டாக முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை ஏற்படும் நோயும் இந்த எண்ணையை தடவுவதனால் விலகும். மேலும் முடி கருமையாகவும் நீளமாகவும் வளரவும் செய்யும்.
இதோடு மட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து முட்டியில் தேய்ப்பதன் மூலம் முட்டி வலி குறையும் ரொமடாய்டு ஆத்ரடீஸ் என்று கூறக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகவும் அந்த நோய்களால் ஏற்படக்கூடிய இதய பாதிப்புகள் குறையவும் முடக்கத்தான் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆர் ஏ ஃபேக்டரை 20 கு குறைப்பதற்கும் உதவுகிறது.
– Advertisement –
இதோடு மட்டுமல்லாமல் முடக்கத்தானை தோசையாக செய்து தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு கூன் விழுதல் பிரச்சனை என்பது முற்றிலும் நீங்கி அவர்களின் முதுகெலும்புகள் நேராக்கி நிமிர்ந்து நடப்பதற்கு உதவி செய்கிறது. மேலும் முடக்கத்தானை அரைத்து பசையாக தயார் செய்து அதை மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் தங்களுடைய அடி வயிற்றில் இரண்டு நாட்கள் பற்றுப்போல போட்டு இருப்பதன் மூலம் முறையற்ற மாதவிலக்கு என்பது நீங்கி முறையான மாதவிலக்கு ஏற்படும். இந்த முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி நாம் தோசை, துவையல், அடை, தேநீர் என்று பல வகைகளில் உபயோகப்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே சுரைக்காய் பயன்கள்
இயற்கை கொடுத்த அற்புதமான பொருளாக திகழக்கூடிய இந்த முடக்கத்தான் கீரையை நாமும் பயன்படுத்தி நம்முடைய எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam