ஒரு நிமிட சட்னி செய்முறை | oru nimida chutney seimurai in tamil

ஒரு நிமிட சட்னி செய்முறை | oru nimida chutney seimurai in tamil

Qries

– Advertisement –

நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் கண்டிப்பான முறையில் தினமும் ஏதாவது ஒரு நேரமாவது டிபன் வகைகள் என்பதை நாம் கண்டிப்பாக செய்வோம். அது இட்லியாகவும் இருக்கலாம், தோசையாகவும் இருக்கலாம், சப்பாத்தியாவும் இருக்கலாம். அப்படி நாம் செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக சட்னி செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பலரும் வீட்டில் செய்த குழம்புகளை ஊற்றி சாப்பிட விரும்ப மாட்டார்கள். சட்னி இருந்தால் இரண்டு தோசை அதிகமாக செல்லும் என்று கூறுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு அவசர அவசர அவசரமான நேரத்தில் ஒரு நிமிடத்தில் சட்னி செய்து கொடுத்து விடலாம். அப்படி செய்து கொடுப்பதால் நமக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் உண்டாகும். அதுதான் சட்னி காலியாவதோடு மட்டுமல்லாமல் தோசையும் சேர்ந்து காலியாக இன்னும் வேண்டுமென்று கேட்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சட்னியை பற்றி நான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
வெங்காயம் – 2பச்சை மிளகாய் -4பூண்டு – 6 பல்கருவேப்பிலை – 2 கொத்துபுளி – நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுதேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
– Advertisement –

செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வெங்காயத்தை தோலுரித்து ஒன்று இரண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டு, இரண்டு கொத்து கருவேப்பிலை, கொட்டை இல்லாத சுத்தம் செய்யப்பட்ட புளி நெல்லிக்காய் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
– Advertisement –

தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால் வெங்காயத்தில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது சட்னி தயாராகிவிட்டது. இந்த சட்னியை ஒரு சிறிய பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி லேசாக சூடு செய்து அந்த சட்னியில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் எளிமையான ஒரு நிமிடத்தில் தயாராக கூடிய பச்சை புளி சட்னி தயாராகி விட்டது.
தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்வதற்கு ஆகும் நேரத்தை விட இந்த சட்னியை செய்வதற்குரிய நேரம் மிகவும் குறைவு. மேலும் ஏற்கனவே நாம் பூண்டை உரித்து வைத்திருந்தோம் என்றால் அதற்குரிய நேரம் இன்னும் குறைந்துவிடும். சட்டு என்று ஆத்திர அவசரத்திற்கு தேங்காய் இல்லை, தக்காளி இல்லை என்னும் சூழ்நிலையிலும், வேலைக்கு கிளம்பும் பொழுது ஏதாவது ஒரு சட்னி செய்ய வேண்டும் என்ற பதட்டத்தில் இருப்பவர்களும் இந்த சட்னியை செய்து கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே :ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறைஎளிதில் செய்யக்கூடிய இந்த சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். அப்புறம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உங்கள் சமையலுக்கு அடிமையாகி விடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top