– Advertisement –
பேச்சிலர்ஸ் அதிகம் செய்யக் கூடிய சாத வகைகளில் இந்த தாளிச்ச சாதமும் ஒன்று! டக்கு டக்குனு குறைந்த இன்கிரிடியன்ஸ் வைத்து செய்யக் கூடிய இந்த தாளிச்ச சாதம், சுட சுட சாப்பிடும் பொழுது நாவிற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எல்லா வெரைட்டி ரைஸ்சும் தோத்து போகும் அளவிற்கு அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த தாளிச்ச சாதம் செய்ய ஐந்து நிமிடம் கூட எடுக்காது. அப்பளம் வைத்து சாப்பிட்டால் கூட போதும், ரசித்து ருசித்து சாப்பிடலாம். அருமையான பேச்சுலர்ஸ் விரும்பும் தாளிச்ச சாதம் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்
தாளிச்ச சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
ளுந்து – ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – நாலு பல்
பச்சை மிளகாய் – ஒன்று
வரமிளகாய் – 2
பெரிய வெங்காயம் – ரெண்டு
தக்காளி – இரண்டு
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிச்ச சாதம் செய்முறை விளக்கம்:
தாளிச்ச சாதம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உதிரி உதிரியான சாதம் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்த அதில் ஒரு வாணலியை வையுங்கள். ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கடலை எண்ணெயை சேர்த்து காய விடுங்கள்.
– Advertisement –
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கடலை பருப்பையும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். நாலு பல் பூண்டு தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இரண்டு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து ஒரு முறை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு ஒரு பிரட்டு பிரட்டியதும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது விதைகள் நீக்கிய தக்காளி துண்டுகளை குட்டி குட்டியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்குங்கள்.
– Advertisement –
இதையும் படிக்கலாமே:இழந்த சொத்தை மீட்டு தரும் பரிகாரம்
பின்பு கடைசியாக கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கியதும், உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து பிரட்டி விடுங்கள். பொடியாக நறுக்கிய மல்லி தழையையும் சேர்த்து சுடச்சுட நன்கு பிரட்டியதும் பரிமாற வேண்டியது தான். அப்பளம், ஊறுகாய் இருந்தால் கூட போதும் தாளிச்ச இந்த சூப்பரான சாதத்துக்கு வேறு எதுவுமே வேண்டாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அஞ்சு நிமிஷம் கூட ஆகாது, மணக்க மணக்க தாளிச்ச சாதம் தயாராகிவிடும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam