சுவையான உருளைக்கிழங்கு பூரி செய்யும் முறை

சுவையான உருளைக்கிழங்கு பூரி செய்யும் முறை

Qries

– Advertisement –

பூரிக்கு உருளைக்கிழங்கை தொட்டு சாப்பிட்டு பார்த்திருப்போம், ஆனால் உருளைக்கிழங்கை சேர்த்து பூரி மாவு பிசைந்து பூரி சுட்டு சாப்பிட்டு பாருங்கள், அருமையாக இருக்கும். ஆலு பூரி எனப்படும் இந்த உருளைக்கிழங்கு பூரி எளிதாக மற்றும் சுவையாக எப்படி வீட்டிலேயே தயார் செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
உருளைக்கிழங்கு பூரி செய்ய தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு
கோதுமை மாவு – ஒரு கப்
சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு

உருளைக்கிழங்கு பூரி செய்முறை விளக்கம்:
உருளைக்கிழங்கு பூரி செய்வதற்கு முதலில் பவுலில் ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ரவையுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது ஒரு மூடி போட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊறவிடுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். சரியாக வேகவில்லை என்றால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுங்கள், கட்டிகளாக இருக்கக் கூடாது.
– Advertisement –

ரவை நன்கு ஊறி வந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகத்தை கையால் நன்கு நுணுக்கி சேருங்கள். அதே போல ஓமத்தையும் கையால் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். ரெடிமேட் ஆக இல்லாவிட்டால் வரமிளகாயை வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து சேர்க்கலாம்.
பின் இவற்றுடன் ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மேத்தி சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும், இல்லை என்றால் விட்டுவிடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து விடுங்கள்.
– Advertisement –

பின் இவற்றுடன் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவையும் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். நன்கு பிசைந்த பின்பு ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊறவிட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வழக்கம் போல பூரி தட்டுவது போல தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி நன்கு உப்பி வருவதற்கு சப்பாத்திக்கு பிசைவது போல அதிக தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.
இதையும் படிக்கலாமே:மனக்குழப்பத்திற்கு விடை சொல்லும் மந்திர வார்த்தை
அது போல மாவை தேய்க்கும் பொழுது ரொம்பவும் மெலிதாக தேய்க்க கூடாது. சற்று கனமாக எல்லா பக்கமும் ஒன்று போல தேய்க்க வேண்டும். இப்போது வாணலியில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். பின் மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்தால் அசத்தலான அருமையான சுவையில் உருளைக்கிழங்கு பூரி மணக்க மணக்க தயார்!

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top