வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

Qries

– Advertisement –

வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய இந்த இனிப்பு வகையை வித்தியாசமான சுவையுடன் செய்வதற்கு எண்ணெயில் போட்டு பொரிக்காமல் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இந்த பணியார ரெசிபி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் தாராளமாக சாப்பிடலாம். அசத்தலான சுவையில் அருமையான வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்.
வாழைப்பழம் வைத்து செய்யக் கூடிய இந்த ரெசிபி எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பராக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் வித்தியாசமான முறையில் நாம் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கும் பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பணியாரம் எப்படி செய்வது? பார்ப்போம்.
– Advertisement –

வாழைப்பழ பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – இரண்டு
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய் – 2
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு – அரை கப்
துருவிய தேங்காய் – அரை கப்
ரவை – அரை கப்
நெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வாழைப்பழ பணியாரம் செய்முறை விளக்கம்:
வாழைப்பழ பணியாரம் செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு பெரிய வாழைப்பழத்தை எடுத்து அதை ஒரு மிக்ஸர் ஜாரில் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து ரெண்டு ஏலக்காய்களை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு அரை கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு வறுத்த ரவை, அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக மிதமான தீயில் அடுப்பை வைத்து வறுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல் வறுபட்டதும் மாவு கெட்டியாக தண்ணீர் ஊற்றி பிரட்டி விடுங்கள்.
– Advertisement –

ஓரளவுக்கு மாவு வெந்து திரண்டு வந்ததும் நீங்கள் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கலந்து விடுங்கள். கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு வர வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். கை சூடு பொறுக்கும் அளவிற்கு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:புத்திர பாக்கியம் உண்டாக செய்ய வேண்டிய தானம்
சட்டி காய்ந்ததும் அதில் தேவையான அளவிற்கு எல்லா குழிகளிலும் நெய் விட்டு இந்த உருண்டைகளை போட்டு எல்லா பக்கமும் நன்கு ஒன்று போல சிவக்க வெந்து வர எடுக்க வேண்டும். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடிய இந்த வாழைப்பழ பணியாரம் எண்ணெயில் பொரிக்காமல், சுடச்சுட சூப்பரான முறையில் இப்பொழுது தயார்! இது குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்பு வகையாக நிச்சயம் இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடித்து போகும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top