– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நன்மை நடக்கக்கூடிய மாதமாக தான் இருக்கும். வேலையில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகள் பெருசாக இருக்காது. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப இட மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மேல் ஓங்கும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இந்த மாதம் பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்க முடியாத லாபத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த மாதம் வெள்ளிக்கிழமை தோறும் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் வேலை சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஒரு வேலையை முடித்தால் அடுத்த வேலை பின்னால் காத்திருந்து, உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். இப்படி நிறைய பொறுப்புகள் உங்கள் தலை மீது வந்து விழும். இதனால் வீட்டில் இருப்பவர்களோடு நேரத்தை செலவு செய்ய முடியாது. வேலை விஷயமாக சில பேர் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். வியாபாரம் தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. தற்காலிகமான இடைவெளி குடும்பத்தோடு உண்டாகும். இதனால் மன வருத்தம் வேண்டாம். வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலைமைக்கு வர வாய்ப்புகள் வரும்போது, அதை பயந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் நல்லது. மற்றபடி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரை தினமும் கும்பிடுங்கள் நன்மையே நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் அதை திட்டமிட்டு முடிக்க தான் பாடுபடுவீர்கள். உங்களை முன்னேற விடாமல் தடுக்க எதிரிகள் பிரச்சினை வரும். இருந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முன் பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். மாதத்தில் ஒரு நாளாவது பிரத்யங்கராவை வழிபாடு செய்யுங்கள். நிம்மதி பிறக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஓட்டம் நிறைந்த மாதமாக இருக்கும். பண்டிகை நாட்கள் என்பதால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்காது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீடு குடும்பம் எல்லாவற்றையும் கவனிக்க நேரம் இருக்காது. இந்த மாதம் லேசான அலைச்சல் இருக்கும். கவலைப்படாதீங்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. நேரத்தை மிச்சம் பிடிக்க, உங்களுக்கு பிரச்சனை வராமல் இருக்க, எல்லா வேலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே பிளான் செய்து முடித்து வையுங்கள். கடைசி நேரம் வரை உங்களுடைய வேலையை எடுத்துச் செல்லக்கூடாது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உறவுகளோடு பிரச்சனை வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக் கொடுங்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராகி வழிபாடு செய்வது நன்மை தரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள பார்க்க வேண்டும். எதிரிகளால் சூழ்ச்சி நடக்கும். வேலையை விட்டு உங்களை நீக்குவதற்கு நிறைய வேலைகளை உங்களுடன் இருந்தே செய்வார்கள். அதை எல்லாம் கடந்து செல்லக்கூடிய பொறுமை உங்களுக்கு தேவை. இந்த மாதம் கொஞ்சம் முள்ளின் மேல் நடப்பது போல தான் சூழ்நிலைகள் இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபடும் காலம் வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிக்கல்களில் இருந்து விடுபடக்கூடிய மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களைத் தொடர்ந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையில் நிம்மதி அடைவீர்கள். எதிரி பிரச்சனை நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு பெருமூச்சு விடக் கூடிய காலம் இது. சந்தோஷமாக இந்த மாதத்தை கடந்து செல்லலாம். தினமும் வீட்டிலிருந்தபடியே குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுடைய வியாபாரத்தை விரிவு படுத்திக் கொடுக்கும். கடன் பிரச்சனையை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வர, நிதி நிலைமை சீர்படும். வருமானம் பெருகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்தோஷம் குடும்பத்தில் இரட்டிப்பாகும். பிள்ளைகளுடைய போக்கில் கவனம் செலுத்துங்கள். சிறுவயதில் இருக்கும் பிள்ளைகளை தனியாக வெளியிடங்களுக்கு அனுப்ப வேண்டாம். அவர்களுடைய போக்கில் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். வரம் தோரம் திங்கட்கிழமை பிள்ளையார் வழிபாடு நல்லதை நடத்தி வைக்கும்
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். வார தொடக்கத்தில் ஒரு சில பிரச்சனைகள் வந்து போகும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இருந்தபோதிலும் விடாமுயற்சியை கைவிடக்கூடாது. தொடர்ந்து வேலை செய்து வரும் போது இந்த மாத இறுதியில் உங்களுடைய உழைப்புக்கான தக்க ஊதியம் கிடைக்கும். ஆகவே சோம்பேறித்தனத்தோடு இருக்காதீங்க. எவ்வளவு தூரம் உங்களால் முயற்சி எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளையும் முதலீட்டாக போட்டால், இந்த மாத இறுதியில் வெற்றி நிச்சயம் உங்களுக்கே. சனிக்கிழமை சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. கவலைகள் எல்லாம் மறக்க போகிறது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகளோடு நண்பர்களோடு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நீங்கள் இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டு எடுப்பீர்கள். மீண்டும் யாருக்கும் புதுசாக வியாபாரத்தில் கடன் கொடுக்காதீர்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உஷாராக இருங்கள். நண்பர்களாகவே நடித்துக் கொண்டு உங்களை பிரச்சினையில் தள்ளுவதற்கு நிறைய பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். முன்பின் தெரியாத நபரோடு ஃபேஸ்புக்கில் ட்விட்டரில் இப்படி எல்லாம் பிரண்டாக இருக்கக் கூடாது. ஜாக்கிரதை. குடும்ப உறவுகளோடு அனுசரணை தேவை. வாக்குவாதம் செய்யக்கூடாது. வாரம்தோறும் புதன்கிழமை பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, எப்போதும் பலனை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்யுங்கள். கடவுள் பலனை எப்போது கொடுக்க வேண்டுமோ, அப்போது கொடுப்பான். அதை விட்டுவிட்டு அகல கால் வைக்க கூடாது. எப்போதும் பகல் கனவு காணக்கூடாது. வேலை தொழில் எல்லாவற்றிலும் கூடுதல் முயற்சி தேவை. அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால், இந்த மாதம் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாரம்தோறும் செவ்வாய் கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். வேலையெல்லாம் சிறப்பாக சென்றாலும், அதிகப்படியான நேரம் அலுவலகத்திலேயே உங்களுக்கு கழிந்து விடும். குடும்பத்தை கவனிக்க நேரம் இருக்காது. இதனால் கணவன் மனைவிக்குள் ஒரு சில வாக்குவாதம் வரலாம். மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரலாம். குடும்பம், வேலை இரண்டையும் சரிசமமாக இந்த மாதம் நகர்த்திச் செல்வதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் எதிர்பார்த்து லாபம் இல்லை என்றாலும், நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. புதுசாக என்ன செய்தால் மார்க்கெட்டில் நிலையாக நிற்க முடியும் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தொழிலில் கால் ஊன்ற முடியும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். வாரம் தோறும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு விளக்கு போடுங்கள் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். எதிலும் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். உங்கள் தரப்பு வாதத்தை பொறுமையாக வையுங்கள். எடுத்த உடனேயே முன் கோபப்பட வேண்டாம். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மாமியார் சொல்வதை கேட்கிறீர்களோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆக வேண்டும். குடும்பத்தில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam