ஆபத்துகள் நீங்க கூற வேண்டிய முருகன் மந்திரம்

ஆபத்துகள் நீங்க கூற வேண்டிய முருகன் மந்திரம்

Qries

– Advertisement –

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருப்போம். நம்மை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்பதை நமக்கு தெளிவாகத் தெரியும், இருந்தும் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டு இருப்போம். அது எப்பேர்ப்பட்ட ஆபத்தாக இருந்தாலும் சரி குடும்பத்திலோ, உறவிலோ, தொழிலிலோ, படிப்பிலோ, வேலையிலோ, சொத்து தொடர்பாகவோ எந்த ஆபத்தாக இருந்தாலும் அந்த ஆபத்துகள் விலக வேண்டும் என்றால் நாம் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் மந்திரம் வழிபாடு
யாமிருக்க பயமேன் என்னும் வாசகம் முருகனின் படங்கள் அனைத்திலும் இருக்கும். அவர் இருக்கும் பொழுது நமக்கு எந்தவித பயமும் இருக்காது என்று பொருள்படும். அந்த வசனத்திற்கு ஏற்றார் போல் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்ட சூழ்நிலை என்பது படிப்படியாக விலகி ஓடும் என்றே கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு ஆபத்து நேர போகிறது அல்லது துன்பம் வரப்போகிறது, இந்த பிரச்சினையில் நாம் மாட்டிக் கொள்ள போகிறோம், இதில் தெரியாமல் வந்து விட்டோமே இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று எப்பேர்பட்ட இக்கட்டான நிலையாக இருந்தாலும் அந்த நிலையிலும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
– Advertisement –

முருகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் எந்தவித ஆபத்தும் வராது. அப்படியே வந்தாலும் வந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றே கூறப்படுகிறது. முழுமனதோடு முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை தேய்பிறை சஷ்டி அல்லது வளர்பிறை சஷ்டியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சஷ்டி என்பது மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் வரும். இந்த இரண்டு நாட்களில் மட்டும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நம்பி 9 முறை கூற வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம். இந்த முறையில் சஷ்டி திதியில் நாம் இந்த மந்திரத்தை கூறும் பொழுது முருகப்பெருமானே நம்முடன் வந்து நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள், துன்பங்கள், ஆபத்துகள் என்று அனைத்தையும் விலக்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

மந்திரம்
“ஓம் நமோ பகவதே சரவணபவாயசக்தி சண்முகாய ருத்ர குமாராயகெளரி சுதாய சகல பூத கண சேவிதாயஅசுர குல நாசனாய ஆகர்ஷய ஆகர்ஷயபந்தய பந்தய மாம் ரக்க்ஷ ரக்க்ஷஓம் சகல ஜ்வர நிவாரணாயசகல கஷ்ட நிவாரணாயஓம் சரவணபவாய ஓம் செளம்ஸ்ரீம் அனுகிரகம் குரு குரு”
இதையும் படிக்கலாமே:தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு
எந்தவித துன்பமும் நம்மை அணுகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி இந்த மந்திரத்தை மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கூறி வழிபாடு செய்தார்கள் என்றால் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளால் அவர்களுடைய கஷ்டங்களும், துன்பங்களும், ஆபத்துகளும், சங்கடங்களும் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top