இந்த வார ராசிபலன் 2/12/2024 முதல் 8/12/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 2/12/2024 முதல் 8/12/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் தைரியமாக செயல்படுவீர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று இறங்கி விடுவீர்கள். வெற்றியும் உங்களுக்கு துணையாக நிற்கும். எதிரிகள் எல்லாம் தானாக உங்கள் வாழ்க்கையை விட்டு விலக்குவார்கள். துணிச்சல் இருந்தாலும், தைரியம் இருந்தாலும், ஒருபோதும் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொள்ள மாட்டீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தேவை இல்லாமல் நேரத்தை செலவழிக்க கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த வாரம் மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை வெளிப்படக் கூடிய வாரமாக இருக்கும். எந்தெந்த வேலையை எப்படி செய்தால் அந்த வேலை சீக்கிரம் முடியும் இன்று நன்றாக தெரிந்து வைத்திருப்பீர்கள். பிரச்சனையாக இருக்கும் சூழ்நிலையை கூட சுலபமாக கடந்து செல்வீர்கள். வியாபாரத்தில் அனுபவம் வெளிப்படும். புதிய மனிதர்களின் நட்பு இன்னும் கொஞ்சம் கூடுதல் நன்மையை கொடுக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பழகும் போது ஒரு எல்லை வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நெருங்கி அளவுக்கு மீறி பழகும் போது சண்டை சச்சரவுகள் வரலாம். சொத்து பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதை, நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும். தொழிலில் முதலீடு செய்வீர்கள். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். பயணத்தின் போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். வேலையை சரியாக செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய கவனத்தை சிதறடிக்காமல் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். நஷ்டமான விஷயங்களை எல்லாம் லாபமாக மாற்ற அயராது உழைப்பீர்கள். உடல் உபாதைகள் இருக்கும். ஜாக்கிரதை, தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்லது செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பிள்ளைகளுடைய போக்கில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமை காக்கவும். உடனடியாக செய்யும் வேலையை விட்டு விட வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பான விஷயம். வியாபாரத்தில் பொறுமை தேவை. போட்டி பொறாமையால் அடுத்தவர்களை பார்த்து நாமும் சூடு போட்டுக்கொள்ள கூடாது. நமக்கு என்ன திறமை இருக்கிறதோ, அதை மட்டும் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அகல கால் வைக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம் ஆக இருக்கும். நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும். நீங்கள் செய்த வேலைக்கு பாராட்டுகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செய்யாத வேலைகளுக்கு உண்டான பாராட்டும் உங்களைத் தேடி வரும். அந்த அளவுக்கு ராசி உங்களுக்கு வேலை செய்யப் போகிறது. சாதிக்க முடியாத நிறைய விஷயங்களை இந்த வாரம் சாதித்துக் கொள்ளுங்கள். நடத்திக் காட்ட முடியாத வேலைகளை இந்த வாரம் கையில் எடுத்தால் சுலபமாக நடத்திக் காட்டலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும். படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தாய் தந்தையின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீராத உடல் பாதைகள் தீரும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மையை செய்யும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் நல்லது கெட்டதை சரியாக எடை போடும் அளவுக்கு திறமையாக இருப்பீர்கள். பொருளாதாரத்தில் உயர்ந்து நிலைக்கு செல்வீர்கள். தலை குனிந்த இடத்தில் எல்லாம் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற வெற்றி உங்களை வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்திற்காக நிறைய பாடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதிக நேரம் வெளியிடங்களில் நேரத்தை செலவு செய்யாதீர்கள். குறித்த நேரத்திற்கு வீடு வந்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வாரம் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக விட்டுவிட மாட்டீர்கள். தோல்வியே அடைந்தாலும், அதில் பலமுறை முயற்சி செய்து வெற்றிவாக சூடுவீர்கள். மன தைரியம் வெளிப்படும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் சண்டை என்று வரும். இருந்தாலும் இறுதியில் உங்களுக்குத்தான் வெற்றி. சில பேருக்கு இந்த துணிச்சல் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நண்பர்கள், தானாக விலகி விடுவார்கள். படிப்பில் ஆர்வம் காட்ட அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். வெளியிடங்களுக்கு செல்லும்போது ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் அலைச்சலோடு இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தை தொட்டாலும், இழுபறியாக இருக்கும். நிறைய வேலைகளும் தலை மேல் வந்து விழும். அலுவலகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகும். உடல் அசதி உண்டாகும். எதிர்பார்த்த அளவுக்கு மனநிறைவு இருக்காது. வியாபாரத்தில் சக வியாபாரிகளோடு போட்டி பொறாமை உண்டாகும். புதிய பகைகள் உருவாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். இந்த வாரம் தினமும் வாராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். எதிரியின் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் உயரும். தேவையற்ற பண பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். வாங்கிய கடனை திருப்பி அடைத்து விடுவீர்கள். வட்டி சுமை குறையும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகாத உணவை எடுத்துக் கொள்ளாதீர்கள். வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதும் நல்லது. உங்களால் இயன்ற உதவிகளை முதியவர்களுக்கு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். இந்த வார துவக்கத்தில் சில பல பிரச்சனைகள் வந்தாலும், உடல் சோர்வு மனசோர்வு சங்கடங்கள் இருந்தாலும், வார இறுதியில் உங்களுடைய வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் இருந்தால், வார இறுதியில் அதை செய்யாமல். வார துவக்கத்தில் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினால் போதும். வாகனங்களை ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்தால் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்ட நஷ்டங்களை மனதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வாரமாக இருக்கும். பிரச்சனைகள் வரும், மேலதிகாரிகளோடு திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும், வியாபாரத்தில் தடைகள், பிரச்சனைகள் நஷ்டம் வந்தாலும் இதெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று சிந்திப்பீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் மீது பழி போட மாட்டீர்கள். குறுக்கு வழியை சிந்திக்க மாட்டீர்கள். அடுத்தவனை அழித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவே வராது. கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கும். உடல் அசதி கொஞ்சம் இருக்கும். நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனைகளை கடந்து சென்றால் இறுதியில் சந்தோஷமான வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கிறது. தினமும் குலதெய்வ வழிபாடு நல்லது செய்யும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top