– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் பெருசாக பிரஷர் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான மனநிலை இருக்கும். எந்த ஒரு வேலையிலும் தெளிவு இருக்காது. செய்யும் வேலையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் சில பல பின்னடைவுகள் வாழ்க்கையில் ஏற்படலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களை சிந்திக்க வேண்டாம். எல்லாம் இறைவன் செயல் என்று இருப்பது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப கையில் பணம் இருப்பு தங்கும். பிள்ளைகளுக்கு சந்தோஷம் கொடுக்கும் வேலைகளை செய்வீர்கள்.மன நிம்மதி அடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகள் நீங்கும். சுறுசுறுப்பு இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு இருக்கும். இன்றைய நாளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இறை வழிபாட்டிலும் மனநிறைவை அடைவீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். வேலையில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எதிரி தொல்லை இருக்கும். முயற்சிகளை முறியடிக்க உங்களை சுற்றி நாலு பேர் வேலை செய்வார்கள். புது நபர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. குழந்தைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் பெருசாக டென்ஷன் இல்லை. மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. மூன்றாவது நபரை நம்பக் கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியத்தோடு இருக்கக் கூடாது. பொய் சொல்லக்கூடாது. பிரச்சனை பெருசாக இருந்தாலும் உண்மையை சொல்லி மாட்டிக் கொள்ளலாம். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கோர்ட் கேஸ் வழக்குகள் கூட உங்களுக்கு எதிராக செயல்படும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொட்ட காரியம் வெற்றியாகும். சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். கட்டுமான தொழில் லாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு சின்ன சின்ன தடைகள் வர வாய்ப்பு உள்ளது. பெருசாக அகல கால் வைக்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் சுய தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் நம்பி முயற்சிகளை மேற்கொள்ள மாட்டீர்கள். மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து கொஞ்சம் பொறாமை இருக்கும். தேவையற்ற செலவுகளை செய்வீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உருவாக வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் இருக்கும். வேலையில் நிறைய போராட்டங்கள் இருக்கும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் இருக்கும். பிரச்சனைகளை சரி கட்ட கொஞ்சம் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் இந்த இரவு வேலையை நல்லபடியாக செய்து திருப்தியோடு தூங்குவீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam