எம்-1098எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஒன்று மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் 114- லும், அதனைப்பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 437-லும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ளச் செய்தியாவது,
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 3-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘சீ’ என்பதைக் குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 1-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘க’-வும், ஐந்து என்பதைக் குறிக்கும் 9-ஆவது உயிர் எழுத்தான ‘ஐ’-யும், 12-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘ர’ ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
புடைப்பு வகையைச் சார்ந்த குறியீடும்; எழுத்துக்களும் மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, சீ + க + ஐ + ர. சீகஐர – சீகைர எனப் படிக்கப்படுகிறது.
‘சீ’ என்பதற்கு திரு, திருமகள், போற்றுதலுக்குரிய எனவும், ‘கைர(வி)’ என்பதற்கு நிலவு, காந்திப்பூ, வெந்தயம் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
அதனடிப்படையில் இந்த முத்திரை நிலவு – இரவில் ஒளியையும், குளுமையும் அளிக்கும் நிலவை திரு / போற்றுதலுக்குரிய நிலவு எனக் சுட்டிக்காட்டுவதாகக் கருதலாம். மேலும் வெந்தயம் (Fenugreek) – நீர் சத்து, புரத சத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச் சத்து, இரும்பு சத்து, சோடிய சத்து ஆகிய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதும் குளிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு தானியமாகும். எனவே அதனை திரு / போற்றுதலுக்குரிய வெந்தயம் எனக் சுட்டிக்காட்டுவதாகவும் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam