Fire Walking Ceremony in Tamil
தீமிதி திருவிழா என்பது அம்மன் கோவில்களில், நெருப்புப் படுக்கையில், வெறுங்காலுடன் நடக்கும் ஒரு புண்ணிய செயல்! தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது! இது முக்கியமாக தெய்வங்களை, அதுவும் குறிப்பாக, அம்மனை மகிழ்விக்கும் ஒரு புனித செயலாக கருதப்படுகிறது. இந்த தீமிதித் திருவிழா முக்கியமாக தென்னிந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது, மேலும் இது சில ஆசிய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில், சமீபத்தில் தீமிதித் திருவிழா நடைப்பெற்றது, மேலும் இந்த கோவில், புகழ்பெற்ற பாண்டவ ராணி மா திரௌபதி அம்மனின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது, மேலும் மா திரௌபதி சக்திதேவியின் அம்சமாகவும் கருதப்படுகின்றாள். தமிழ் மாதங்களான ஆடி, ஆவணி மாதங்களில், பெரும்பாலும் சக்தி தேவி கோவில்களில், தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
“மா அக்னி தேவி அம்மன்” என்று அம்மன் அழைக்கப்படுவதால், மற்றும் அக்னி தீப்பிழம்பு வடிவில் அம்மன் தோன்றுவதாக நம்பப்படுவதால், தீமிதித் திருவிழா, நம் புனித அன்னை மா சக்தி தேவியை, குறிப்பாக நம் குலதேவி தாய் அங்காளம்மனை மிகவும் மகிழ்விக்கும்.
பண்டைய புராணத்தின்படி, ஒரு முறை இன்றைய மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவன் கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு, வலியைத் தாங்க முடியாமல், மீனாட்சி அம்மனை வழிபடத் தொடங்கினான். ஒரு நாள் இரவு, அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில், அன்னை மீனாட்சியே தோன்றி, தனது கோவிலில் தீமிதித் திருவிழா நடத்துமாறு அறிவுறுத்தினார், மேலும் அப்புனித சடங்கை செய்வதற்கான வழிமுறைகளையும் கூறினார்.
மறுநாள் காலை மதுரையை ஆண்ட அப்போதைய பாண்டிய மன்னன் தீமிதி விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து, தாமே அன்னை மீனாட்சி அம்மனின் தெய்வீக மந்திரங்களை உச்சரித்து, புனித நெருப்பில் நடந்து வந்துள்ளான். சில நாட்களிலேயே கால் வலியில் இருந்து முற்றிலும் விடுபட்டு, தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு ஜோடி அற்புதமான தங்க கொலுசுகளை செய்வித்து, அன்னை மீனாட்சி அம்மன் கால்களில் அலங்கரித்துள்ளார்.
இப்போதும் நம் தெய்வீகத் தாயான அன்னை மீனாட்சி அம்மனின் கால்களைக் கூர்ந்து கவனித்தால், மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும் தங்கக் கொலுசுகளை நாம் அனந்தமாக கண்டுக்களிக்கலாம்!
எனது குலதெய்வம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், கீரக்காரவீதி, ஈரோடு – 1 இல் நடைபெற்ற தீமிதி விழாவின் அற்புதமான வீடியோவை கண்டுகளித்தேன், அந்த வீடியோவுக்கான யூடியூப் லிங்க் பின்வருமாறு: https://www.youtube.com/watch?v=twp-6f8dWXI
இந்த புனித தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், அம்மன் கோவில் நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம்.
“ஓம் மா அங்காளம்மனே துணை”
எழுதியவர்: ரா. ஹரிசங்கர்
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam