மலை உருவக் கோயில் / கடல் வடிவ மருதநிலத்தூர்

மலை உருவக் கோயில் / கடல் வடிவ மருதநிலத்தூர்

Qries

எம்-1100எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஒன்று மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் 114- லும், அதனைப்பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 437-லும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ளச் செய்தியாவது,
கீழ் பகுதி உடைந்துள்ள சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 5 எழுத்துக்கள்  பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது ஆகிய மூன்று எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் அடையாளம் காண முடியாத ஒரு மிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்ககளை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + ரு + ரூ + பா + ழி, பருரூபாழி  எனப் படிக்கப்படுகிறது.
இதிலுள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரூ’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ழி’ என்பது 15-ஆவது உயிர்மெய் எழுத்து,
‘பரு’ என்பதற்கு மலை, துறக்கம், கடல் எனவும், ‘ரூ(பம்)’ என்பதற்கு உருவம், அழகு, வடிவம் எனவும்,  ‘பாழி’ என்பதற்கு அகலம், உரை, குகை, இடம், கோயில், நகரம், மருதநிலத்தூர், பகைவரூர், முனிவர் வாழுமிடம், சொல், வானம், கடல், பாசறை, பெருமை, வலிமை, போர் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
அதன் அடிப்படையில் இந்த முத்திரை மலை உருவக் கோயில் அல்லது கடல் வடிவ மருதநிலத்தூர் எனப் பொருள் படுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top