– Advertisement –
தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்:
– Advertisement –
இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப்
கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்காது.
– Advertisement –
ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் 10, சோம்பு 1 ஸ்பூன், போட்டு முதலில் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊற வைத்த பருப்புகளை எல்லாம் தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றாமல், கொரகொரப்பாக திக்காக இந்த அடை மாவை அரைத்து ஒரு பாத்திரத்தில், மாற்றிக் கொள்ளவும். (மாவை தண்ணீராக அரைத்து விட்டாலும் அதை மொறுமொறுப்பாக கிடைக்காது). அரைத்த இந்த மாவில் சுரக்காய் துருவல், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவாப்பிலை, தேங்காய் பத்தை, பெருங்காயம் போட்டு நன்றாக கலந்து விடவும்.
இதையும் படிக்கலாமே: தக்காளி உளுந்து சட்னி ரெசிபி
ஒரு அகலமான இரும்பு கடாயை சூடு படுத்தி, அதில் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் விட்டு, அரைத்து வைத்திருக்கும் அடை மாவை அதில் தடிமனாகவும் இல்லாமல், மெலிசாகவும் இல்லாமல், வார்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான ஒரப்பு அடை தயார். இந்த அடை வார்க்கும்போது ஒரு வாசம் வரும் பாருங்க அது அடுத்த தெரு வரை வீசும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். நாவிற்கு சுவை தரும். இப்படி ஒரு அடை ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam