– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகத்திற்கு ஒரு துளி கூட குறைவிருக்காது. சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைப் பார்ப்பவர்கள், உங்களைப் போல வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். செய்ய முடியாமல் இருந்த வேலைகளை எல்லாம் இன்று செய்து முடித்து, நல்ல பெயர் எடுப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமையாக சிந்திப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். புத்திசாலி என்ற பெயர் கூட உங்களுக்கு கிடைக்கும். விடுமுறை நாள் என்று கூட பாராமல் நேரம் காலம் பாராமல் உழைத்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த நாள் உற்சாகத்தோடு இருக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் பல நடந்தாலும் ஏதோ ஒரு உடல் சோர்வு சோகம் உங்களுக்குள் மறைந்திருக்கும். இறை வழிபாடு செய்ய ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் மனைவியோடு வெளிப்படையாக பேச முடியாத சூழ்நிலை உண்டாகும். நேர்மையாக இருங்கள். பொய் சொல்லாதீர்கள். பிரச்சனைகளில் இருந்து தானாக விடுபடுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு அதிகமாக இருக்கும். உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும், நண்பர்களும் உறவினர்களும் உதவி செய்வார்கள். திறமையாக செயல்பட்டு அத்தனை வேலைகளையும் முடித்து விடுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகள் தொலைபேசியின் மூலம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக இருக்கவும். யாரையும் எதிர்த்து கடினமாக பேசாதீர்கள். எந்த ஒரு வேலையிலும் அவசரப்படக்கூடாது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அதிக முதலீடு வைப்பது அகலக்கால் வைப்பது போன்ற விஷயங்களை இன்று செய்யக் கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அடக்கம் பணிவு அதிகமாக இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் பணிவாக நடந்தே, உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு இருக்கும். இன்று மாலை சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனோ பக்குவம் இருக்கும். பொது காரியங்களில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. தேவையற்ற விஷயங்களை சிந்தித்து அன்றாட வேலையில் கோட்டை விடக் கூடாது. கஷ்டம் சந்தோஷம் இரண்டும் வாழ்க்கையில் மாறி மாறி வரக்கூடியது. ஆகவே எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வர வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எது நடந்தாலும் பொறுமையாக இருப்பீர்கள். சந்தோஷம் வந்தாலும் ஆர்ப்பாட்டம் பெருசாக இருக்காது. சோகம் வந்தாலும் துவண்டு போக மாட்டீர்கள். சரிசமமாக உங்களுடைய வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி இருக்கும். சந்தோஷம் வீட்டில் நிறைவாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை இருக்கும். எங்கு சென்றாலும் உங்களுக்கு நல்ல உபசரிப்பு இருக்கும். சந்தோஷமாக இந்த நாள் நகர்ந்து செல்லும். கொஞ்சம் செலவுகள் ஏற்படும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது. இல்லை என்றால் மாதக் கடைசியில் பிரச்சனைகள் வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து ஒரு முடிவை எடுப்பீர்கள். இதனால் நிறைய லாபம் இருக்கும். தேவையில்லாத ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடிய நிலைமையில் இருந்து நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்வீர்கள். சில நல்ல அனுபவங்கள் உங்களுக்கு இன்று கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வீண் போகும். கொஞ்சம் அமைதியாக இருங்கள். எந்த விஷயத்திற்கும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது. கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் உள்ளது. வாயை கட்டுபடுத்தும் போது நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam