– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எல்லா வேலையிலும் ஆர்வம் காட்டுவீர்கள். புது வேலைகளை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் கைவிடாமல், செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிதானமாக உங்களுடைய வேலைகளை கவனிப்பீர்கள். முன் கோபப்பட மாட்டீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரி தொல்லை விலகும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையிலும் தொழிலிலும் பெருசாக பிரஷர் இருக்காது. உறவுகளோடு ஒன்றாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஈடுபாடோடு வேலை செய்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன லாபம் உயரக்கூடிய நாளாக இருக்கும். வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. சொத்து சுகம் சேர்க்க இருக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்து தடைகள் விலகும். அலுவலகப் பணி நிறைவாக நடந்து முடியும். வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களை பொறாமை கண்ணோட்டத்தோடு நாலு பேர் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுடைய வேலையை நோட்டம் விட்டு உங்களுக்கு பிரச்சனை தரும், எதிரிகளின் ஆட்டத்தை கண்ட்ரோல் செய்ய முடியாது. எதிரிகளை சமாளிக்கவே இந்த நாள் சரியாக இருக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். வியாபாரத்தை கவனிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் இந்த நாள் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் வீண் விரைய செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகம் வரும். எல்லா விஷயத்திலும் அவசரப்படுவீர்கள். புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் சண்டை வரவும் வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக வாயை திறக்க வேண்டாம். அமைதியை கடைபிடிக்க வேண்டும் நிதானம் இன்று உங்களை காப்பாற்றி விடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். உற்சாகத்திற்கு ஒரு துளி அளவும் குறைபாடு வராது. ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையான அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ரொம்பவும் பணிவோடு நடந்து கொள்வீர்கள். எதிரிகளை கூட சுலபமாக சமாளிப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். அனைவருக்கும் பிடித்தது போல இன்று உங்களுடைய நடவடிக்கை இருக்கும். ஒரு வசீகரத் தோற்றமும் இருக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு வேலையை உங்கள் கையில் கொடுத்தால் பொறுப்போடு முடித்துக் கொடுப்பதில் குறியாக இருப்பீர்கள். வீண் செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். தேவையற்ற மன கவலைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் கூட காணாமல் போகும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam