– Advertisement –
மேஷம்
மேஷ ராசி காரர்கள் இன்று ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். விடா முயற்சியோடு செயல்படுவீர்கள். விடாமுயற்சி உங்களுக்கான விஸ்வரூப வெற்றியையும் கொடுக்கும். வீட்டிலிருந்து வந்த குடும்ப சண்டைகள் சரியாகும். மனதிற்கு சந்தோஷம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய தினம் கூடுமானவரை கொடுக்கல் வாங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பெற்றவர்கள் உங்களுடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். உங்களுக்கு தேவை என்றால், இந்த நாளில், வீட்டில் உங்கள் மனதில் நினைத்த விஷயங்களை சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைய வாய்ப்புகள் உள்ளது. இனம் புரியாத மன குழப்பம் இருக்கும். இருந்தாலும் கடவுள் உங்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் தான் செய்வான். மனது குழப்பம் அடையும்போது, இறைவனை மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்லது மட்டுமே நடக்கும். வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். அன்றாட வேலையை அன்றாட முடிப்பது சிறப்பு.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். மனதிற்கு நிம்மதியும் இருக்கும். வேலையிலும் தொழிலும் இருந்து வந்த டென்ஷன் விளங்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சகஜமாக அடுத்தவர்களிடம் பேசி பழகுங்கள். நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவி கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் இருக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் எந்த வேலையும் செய்யாதீர்கள். குடும்ப விஷயங்களில் பொய் சொல்ல வேண்டாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வருமானம் இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு வேலையிலும் பின்வாங்க மாட்டீர்கள். துணிச்சல் வெளிப்படும். யாரை கண்டும் அஞ்ச மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். பேசக் கூடிய வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல வெற்றி இருக்கும். வழக்கறிஞர்கள் ஆசிரியர்களுக்கு கூடுதல் பலனை பெற்றுத் தரும் நாளாக இந்த நாள் அமையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். உற்சாகத்தில் ஒரு துளியும் குறைவில்லாமல் நடந்து கொள்வீர்கள். அன்றாட வேலையை அன்றாடம் முடித்து வைப்பீர்கள். உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய புத்தி கூர்மையால் வியாபாரத்தில் நிறைய புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அது லாபத்தையும் கொடுக்கும். மத்த வியாபாரிகள் கொஞ்சம் போட்டி போடுவார்கள். அனுசரித்து செல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எல்லா வேலையையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செய்ய வேண்டும். சில நேரங்களில் தாமதமாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. தாமதமானால் தேவையற்ற டென்ஷனும் உண்டாகும். ஆகவே இன்றைய நாள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வெளியிடங்களுக்கு செல்லுவதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பிளான் செய்யணும், பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். மனதிற்கு உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். காதல் கைகூடும். பிடித்தவர்களிடம் அன்பை நீங்களும் வெளிப்படுத்துவீர்கள். இந்த நாள் மனதிற்கு இனிமையான நாளாக அமையப் போகிறது. வேலையிலும் தொழிலிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். பொழுதுபோக்கில் நேரத்தை கழித்து வீணடிக்காதீங்க.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam