– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சந்தோஷம் இருக்கும். அன்பு செலுத்தக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்தலாம். உங்களின் மீது அடுத்தவர்கள் அன்பு செலுத்தலாம். காதல் வெளிப்படும். சந்தோஷம் பிறக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலை தொழில் எல்லாம் எதிர்பார்த்ததை விட முன்னேற்ற பாதையில் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு வீண் விரைய செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசாதீர்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வியாபாரத்தில் கடனுக்கு எந்த பரிவர்த்தனை செய்யக்கூடாது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நிறைய நடக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகளும் உண்டு.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எப்படியாவது எல்லா வேலைகளையும், சரியான நேரத்தில் முடித்து தர வேண்டும் என்று முயற்சி செய்து போராடுவீர்கள். அதிகாலை வேலையில் உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக துவங்கி விடுவீர்கள். நல்லது நடக்கும். உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் லாபமாக மாறும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் இன்று வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கூடுமானவரை ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் வரும். மழையால் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முடங்கி போகும். எதிர்பாராத பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான வாழ்க்கை இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். மழைக்காலம் என்பதால் வயதானவர்கள் வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். புதுப்புது எதிரிகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழுங்கள். எதிர்பாராத பரிசு பொருட்களும் கிடைக்கும். உற்சாகத்துக்கு குறைவு இருக்காது. மழை பெய்து கொண்டிருப்பதால் அன்றாட வேலை சுமையும் பாதியாக குறையும். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொள்வீர்கள். எதிரிகள் முன்பு ஜெயித்து காட்டுவீர்கள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வருமானம் பெருகும் கடன் சுமை குறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். கோபத்தால் நிறைய நல்ல விஷயங்களை இழக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வரும். குடும்ப சண்டை யை பெருசாக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று பொறுமையாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பெறுக கூடிய நாளாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்த சிறு தொகை கூட பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். சேமிப்பை உயர்த்துவீர்கள். செலவுகளை சமாளிக்க ஒரு தெம்பு வந்துவிடும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். நீண்ட தூரம் பயணத்தின் மூலம் உடல் அசதி இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam