மார்கழி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

மார்கழி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ரொம்பவும் நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தானாக விலகி விடும். சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். பண நெருக்கடி, சொந்தங்களோடு இருந்து வந்த நெருக்கடி, உடல் உபாதைகள் எல்லாம் சரியாகி இந்த மாதம் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட தொடங்கி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தானாக விலகும். வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் வாங்கி இருந்த கடனை எல்லாம் திருப்பி அடைத்து விடுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான முன்னேற்றத்தை தரக்கூடிய சில முயற்சிகளை இந்த மாதம் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். தடைகள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. தோல்விகளை கண்டு துவண்டு போகக் கூடாது. விடா முயற்சி இந்த மாதம் உங்களுக்கு நிச்சயம் விஸ்வரூப வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சொத்து சுகம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மார்கழி மாதம் வெற்றி தரும் மாதமாக அமையப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சில பேருக்கு வேலையில் இடம் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்து நிற்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தலைகள் நீங்கி படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். புதிய தொழில் துவங்க வங்கி கடன் முயற்சி செய்யலாம். எதிரிகள் பிரச்சினை நீங்கும். புது உறவுகள் குடும்பத்தில் சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் ஹனுமன் வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த மார்கழி மாதம் கொஞ்சம் குழப்பமான மனநிலை இருக்கும். எந்த ஒரு வேலையையும் தெளிவாக செய்ய மாட்டீர்கள். ஒரு வேலையை துவங்கும் போது அதற்கான பிரச்சனை உங்களோடு ஒட்டிக் கொள்ளும். இதனால் இழுபரிகள் ஏற்படும். இருந்தாலும் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு இருக்கிறது. வியாபாரத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அன்றாட வேலையை அன்றாட முடிப்பது ஒன்று மட்டுமே சிக்கல்களுக்கான தீர்வு. மொத்த வேலையையும் ஒன்றாக செய்து கொள்ளலாம் என்று ஒருபோதும் தள்ளி வைக்க கூடாது. அதுதான் இந்த மாதத்திற்கு உங்களுக்கான பாடம். தினமும் அம்பாள் வழிபாடு செய்வது மனதிற்கு நிறைவை தரும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரக்கூடிய மரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக வெற்றி அடையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற நண்பர்கள் உறவுகள், உங்களை விட்டு விலகி விடுவார்கள். எதிரி தொல்லை யிலிருந்து விமோசனம் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை கூடுமானவரை இந்த மாதம் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த ஈசன் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கிறது. நீங்கள் விரும்பிய வேலைகளை எல்லாம் செய்யலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எப்போதும் போல சுமூகமாக செல்லும். இந்த மாத இறுதியில் கொஞ்சம் நிதி நிலைமை பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். தினமும் அஷ்டலட்சுமிகளையும் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் இனிமையான மாதமாக இருக்கும். ஆன்மீகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இறை வழிபாடு செய்வதன் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல வருமானம் இருக்கும். தினமும் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்தது நடக்காததால் கொஞ்சம் சோகம் இருக்கும். நிறைய எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் இந்த மாதம் நிச்சயம் ஏமாற்றம் இருக்காது. பெரிய கோட்டை கட்டி கனவு காண வேண்டாம். எந்த வேலையிலும், தொழிலிலும் அகல கால் வைக்க வேண்டாம். உங்களுடைய தகுதிக்கு உங்களுடைய திறமைக்கு என்ன வருமோ அதை மட்டும் முயற்சி செய்தால் போதும். மூன்றாவது மனிதர்களுடைய பேச்சை கண் மூடித் தனமாக கேட்காதீர்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் மனதை அலைபாய விடக்கூடாது. கவனமாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய மாதம் இது. உங்களை ஏமாற்ற நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பணத்தையோ உங்கள் நகையையோ யாரையும் நம்பி கொடுக்காதீங்க. திரும்பி வராமல் போகவும் வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத இடத்தில் சீட்டு போட வேண்டாம்.  கூடுதல் கவனம் தேவை. தினம்தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவைக்கு மட்டும் பணத்தை செலவு செய்தால் போதும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடைய போக்கை கவனிக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நடந்தால் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சுலபமாக சரி செய்யலாம். வேலை செய்யும் இடத்திலும் நிதானம் இருக்க வேண்டும். ஒரு தொழிலில் முடிவு எடுப்பதாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு அவசரம் கூடவே கூடாது. தினமும் முருகர் கோவிலில் அமர்ந்து கண்களை மூடி ஆறு முறை சரவணபவ மந்திரம் சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் பொறுமை காக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. பதராத காரியம் இந்த மாதம் உங்களுக்கு சிதறவே சிதறாது. பதட்டத்தோடு அடுத்தவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக எந்த முடிவையும் நீங்கள் எடுக்கக் கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம் இது. வாழ்க்கை துணை பேச்சை கேளுங்கள். தாய் தந்தையரின் பேச்சை கேளுங்கள். மூன்றாவது மனிதர்கள் பேச்சை அறவே தவிர்க்கவும். புது நண்பர்கள் உடன்பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யார், கெட்டது நினைப்பவர்கள் யார் என்பதை இந்த மாதம் யூகிக்கவே முடியாது ஜாக்கிரதை. தினமும் ஹனுமன் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவீர்கள். உங்களுடைய நிலை புரியாது நடந்து கொள்வீர்கள். நஷ்டமாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் போய் தேடி தேடி செய்வீர்கள். உங்களுக்கே எதுவும் புரியாது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்துவது தான் நல்லது. செலவை குறைக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேவையில்லாத விஷயத்திற்கு பணத்தை செலவு செய்யக் கூடாது. மேலதிகாரிகளையோ அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்களையோ பகைத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் பணிந்து சென்றால் மட்டுமே இந்த மாதம் உங்களால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். வேறு வழியே கிடையாது. குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள். நிச்சயம் இறைவன் உங்களுக்கு நல்லதை செய்வான்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top