– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டது புரியக்கூடிய நாளாக இருக்கும். இத்தனை நாள் ஏமாந்த விஷயங்களில் உஷாராகிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். கெட்டது தானாக உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். வீட்டில் உறவுகளோடு பேசி பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீட்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நபர் சொல்வதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். எதிரி தொல்லை நீங்கும். அடமானத்தில் வைத்த நகையை மீட்டு எடுப்பதற்கு உண்டான வழிகள் கிடைக்கும். கடன் சுமை குறையும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான தூக்கமும் சில பேருக்கு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு வரும். நிதி நிலைமை சீராகும். எப்படித்தான் இந்த பிரச்சனையை சமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே இருந்த உங்களுக்கு நல்லதொரு தீர்வை இறைவன் காண்பித்துக் கொடுப்பான். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கவனமாக பேசுங்கள். முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சேமிப்பு கரையும். இதனால் கொஞ்சம் டென்ஷன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. எந்த ஒரு முக்கியமான வேலையையும் அலட்சியமாக என்ன கூடாது. தாமதமாக ஒரு விஷயத்தை துவங்காதீர்கள். இன்றைய நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே துவங்கி விட்டால் வரும் பிரச்சனைகள் தானாக சரியாகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடைகளும் தடங்கல்களும் வரும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. நண்பர்கள் என்று நம்பி வீட்டு விஷயங்களை வெளியில் சொல்லாதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பு மடங்கு இருக்கும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் சரியாகும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டத்தையும் ஈடு கட்டுவீர்கள். வருமானமும் பெருகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் பிரயாணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். சுப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் வரும். உறவுகளால் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். யார் சொந்த பந்தங்களை பற்றியும், யாரும் குறை கூறாமல் இருப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் அமைதியை கடைபிடிக்கவும். அடுத்தவர்கள் மனது நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள். மேலதிகாரிகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களைவிட பதவியிலும் வயதிலும் மூத்தவர்களை உதாசீனப்படுத்தினால், தேவையற்ற பிரச்சனைகள் வரும். ஜாக்கிரதை தலைகனம் கூடவே கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சாந்தமாக இருப்பீர்கள். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்து விட வேண்டும் என்று நிறைய விஷயங்களை அனுசரித்துக் கொள்வீர்கள். குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று சில பல நல்ல காரியங்களை இன்று நடத்தி முடிப்பீர்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam