– Advertisement –
இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை படைத்த சிவப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வேண்டுதலைப் பொருத்தும் நாம் வேண்டும் முறையை பொருத்தும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அவரை முழுமனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய மந்திர ஜெபமானது வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றுமாம். அப்படி சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சிவ வசிய மந்திரம்
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் என்பது இருக்கும். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அதை முன்வைத்து நாம் வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சாதாரணமாக செய்யாமல் மந்திர வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதற்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசக்தி வாய்ந்த சிவபெருமானை வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
இந்த மந்திரத்தை சனி மகா பிரதோஷமான இன்று இரவு 12 மணிக்குள் கூற வேண்டும். ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சை நன்றாக உள்வாங்கி வெளிவிட்ட பிறகு கையில் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த தண்ணீரை பார்த்தவாறு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைக்க விரும்புகிறீர்களோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டது சிவபெருமானுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மூன்று முறை கூற வேண்டும். பிறகு ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எண்ணிக்கை கணக்கில் உச்சரிப்பதாக இருக்கும் பட்சத்தில் 54, 108 என்ற எண்ணிக்கையில் உச்சரிக்கலாம்.
இதே முறையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் என்று மூன்று நாட்களும் முதல் நாள் எந்த நேரத்தில் நாம் வேண்டுதல் வைத்தோமோ மந்திரம் கூறினோமோ அதே நேரத்தில் தொடர்ச்சியாக இதே முறையை பின்பற்றி சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு அந்த தண்ணீரை சிறிது சிறிதாக பருக வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். அசைவம் சாப்பிட்டிருக்கும் பட்சத்தில் குளித்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கூறலாம். முழுமனதோடு சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு அந்த தண்ணீரை பார்த்து கூறினால் போதும்.
– Advertisement –
இப்படி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூற இயலாது என்று நினைப்பவர்கள் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை சிவபெருமானிடம் கூறுவது போல் ஒரு கடிதத்தை எழுதிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை 21 முறை எழுத வேண்டும். இப்படி எழுதிய இந்த பேப்பரை மடித்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு அடியிலோ அல்லது லிங்கத்திற்கு அடியிலோ வைக்கலாம் அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானின் பாதத்தில் வைக்கலாம் அல்லது கோவிலில் இருக்கக்கூடிய புனித விருட்சமாக கருதப்படும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வில்வ மரம், வன்னி மரம் போன்ற மரங்களின் கிளைகளிலோ அல்லது வேர்களிலோ இந்த கடிதத்தை வைத்துவிட்டு மனதார சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலமும் நம்முடைய வேண்டுதல் என்பது நிறைவேறும்.
நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை காலையிலோ, மாலையிலோ மூன்று முறை கையில் தண்ணீரை வைத்துக்கொண்டு கூறி அந்த தண்ணீரை பருகி வருவதன் மூலம் நம் வாழ்வில் அனைத்து விதமான செல்வ வளங்களையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.
– Advertisement –
மந்திரம்
“ஓம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் ஹம் வசிய சிவ ஓம்”
இதையும் படிக்கலாமே:கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு
முழு மனதோடு சிவபெருமானை நம்பி சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு சிவபெருமானின் அருளால் அவர்கள் வேண்டியது நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam