– Advertisement –
இன்றைய காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காலம் என்பது பனிக்காலம் ஆகும். இந்த காலத்தில் பலருக்கும் இந்த சளி, இருமல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருப்பவர்களுக்கு உடனே நம்முடைய முன்னோர்கள் செய்து கொடுக்கக் கூடிய உணவாக கருதப்படுவது தான் ரசம். ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட அது ஒரு நல்ல மருந்தாகவே திகழும்.
அப்படிப்பட்ட ரசத்தை இன்னும் அதீத மருத்துவத் தன்மை மிகுந்த ரசமாக மாற்றுவதற்கு நாம் நெல்லிக்காயை வைத்து ரசம் வைத்து கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பது ஏழைகளின் ஆப்பிள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லிக்காயில் அதிக அளவில் விட்டமின் சி சத்து இருப்பதால் இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் நெல்லிக்காயை வைத்து நாம் ரசம் செய்யும்பொழுது அந்த ரசம் மிகவும் மருத்துவ குணம் மிகுந்த ரசமாகவே கருதப்படுகிறது. அந்த ரசத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்நெல்லிக்காய் – 5தண்ணீர் – 2 1/2 கப்தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 4சீரகம் – 2 டீஸ்பூன்மிளகு – 2 டீஸ்பூன்பூண்டு – 6 பல்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை சுத்தம் செய்து 10லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை குக்கரில் சேர்த்து இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயும் சேர்த்து ஒரு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். இது இரண்டிலிருந்து மூன்று விசில் வரும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். விசில் போன பிறகு குக்கர் மூடியை திறந்து இந்த பருப்பு மற்றும் நெல்லிக்காயை நன்றாக மசித்து விடவேண்டும்.
– Advertisement –
பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தக்காளி, காய்ந்த மிளகாய் இரண்டு, சீரகம், மிளகு, பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை துவரம் பருப்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். புளியை தண்ணீரில் ஊற வைத்து அதை கரைத்து ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒன்னரை கப் அளவு தண்ணீரையும் சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு போன்றவற்றையும் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
இது நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளித்து இந்த நெல்லிக்காய் ரசத்தில் ஊற்றி விட வேண்டும். கடைசியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித்தலை, கருவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் கம கமக்கும் நெல்லிக்காய் ரசம் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சட்னிஉடல்நலம் சரியில்லாதவர்களுக்கு சாதாரணமாக தக்காளி ரசம், புளி ரசம் என்று வைத்துக் கொடுப்பதற்கு பதிலாக நெல்லிக்காய் ரசத்தை வைத்து கொடுத்தோம் என்றால் அந்த ரசத்தின் மருத்துவ தன்மை இன்னும் அதிகமாகவே இருக்கும். சுவையும் அபாரமாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam