
– Advertisement –
பாரம்பரியமான முறையில் மல்லித்தூள் அரைத்து சமையல் செய்யும் பொழுது அந்த சமையலின் ருசியே அலாதியானதாக, தனித்துவமானதாக இருக்கும். செட்டிநாடுகளில் எல்லாம் ஒவ்வொரு மசாலாவும் தனித்தனியாக அரைத்து செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். கடையில் மல்லித்தூள் வாங்கினால் அதன் வாசம் கூட அவ்வளவாக அடிப்பதில்லை. கலப்பட உலகில் நம் கைப்பட அரைத்து மசாலாக்களை பயன்படுத்துவது தான் என்றுமே நல்லது. மணக்க மணக்க மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறையை பற்றிய தகவல்களை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
சமையல் என்றாலே அதற்கு மல்லித்தூள் தான் முதன்மையானது. எந்த குழம்பு வைத்தாலும் மல்லித்தூள் சேர்த்து செய்யும் பொழுது அந்த குழம்புக்கு தனி ருசி கிடைக்கும். குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பாதி அளவிற்கு மல்லித்தூள் சேர்ப்பார்கள். தனியாக மல்லித்தூள் அரைத்து வைத்துக் கொள்வதும், விதவிதமான குழம்பு வகைகளை செய்வதற்கு உதவும்.
– Advertisement –
மல்லித்தூள் அரைக்க தேவையான பொருட்கள் :
மல்லி விதைகள் – ஒரு கிலோ
சீரகம் – 100 கிராம்
கறிவேப்பிலை – ஆறு கைப்பிடி
சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் அரைக்கும் முறை :
மல்லித்தூள் அரைக்க ஒரு பெரிய அடிகனமான இரும்பு வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு கிலோ தனியா விதைகளை சேர்த்து குறைந்த அளவில் தீயை வைத்துக் கொண்டு ஒரு நிமிடம் லேசாக வாசம் வர வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ தனியாவை அப்படியே போட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறையாகப் பிரித்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய் சேர்ப்பதால் தனியாவின் பச்சை வாசம் நன்கு நீங்கிவிடும். நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியாது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம், ஆறு மாதங்கள் வரை பூச்சி, புழுக்கள் வராமல் பிரஷ்ஷாக இருக்கும். எல்லா விதைகளையும் அரைத்து எடுத்த பின்பு சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ தனியாவுக்கு, 100 கிராம் சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடம் வாசம் வர வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை கூட்டி வைத்தால் பொருட்கள் கருகிவிடும், எனவே குறைந்த தீயில் வைத்து தான் எல்லாவற்றையும் வறுக்க வேண்டும்.
– Advertisement –
கடைசியாக ஆறு கைப்பிடி அளவிற்கு நல்ல பிரஷ்ஷான கருவேப்பிலை இலைகளை கழுவி சுத்தம் செய்து பேன் காற்றில் ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் நிறம் மாற, மொறு மொறு என்று ஆகும் வரை குறைந்த தீயில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் வறுத்து வைத்த பின்பு, நன்கு ஆற வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுலபமாக பிரஷ்ஷான மல்லித்தூள் பாரம்பரியமான முறையில் இப்படித்தான் தயார் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:தங்கம் சேர வளர்பிறை அஷ்டமி பரிகாரம்
மல்லித்தூள் அரைக்கும் போது கறிவேப்பிலை இலைகளை சேர்த்து அரைக்கும் போது அதன் வாசம் அருமையாக இருக்கும். கருவேப்பிலை இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள், இது போல மசாலாக்கள் அரைக்கும் பொழுது உடன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. கருவேப்பிலையில் ஏராளமான இரும்பு சத்துக்கள் உள்ளன. சீரகம் அஜீரண கோளாறுகளை சரி செய்யக் கூடியது. இவற்றையெல்லாம் சேர்த்து மல்லித்தூள் பாரம்பரியமான முறையில் இது போல நீங்களும் தயார் செய்து பாருங்கள், எல்லா குழம்பும் இனி ருசிக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam