
– Advertisement –
நாட்டு காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்த நாட்டு காய்கறிகளை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும் அதை மருந்தாக கூட எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வளரும் பிள்ளைகள் இதைத் தொடவே மாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்பொழுதும் செய்வதை போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாட்டு காய்கறிகளில் ஒன்றாக திகழக்கூடிய புடலங்காயை வைத்து எப்பொழுதும் போல் பொரியல், கூட்டு என்று செய்யாமல் சப்பாத்தி, சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளும் அளவிற்கு புடலங்காய் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
புடலங்காய் – 350 கிராம்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,கடுகு – ஒரு டீஸ்பூன்,கருவேப்பிலை – ஒரு கொத்து,சீரகம் – ஒரு டீஸ்பூன்,வெங்காயம் – ஒன்று,இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்,தக்காளி – ஒன்று,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,சாம்பார் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,தேங்காய் துருவல் – அரை கப்,வேர்க்கடலை – 1/4 கப்,உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு அதற்குள் இருக்கக்கூடிய விதைகளையும் நீக்கிவிட்டு சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கருவேப்பிலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக இதில் இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போன பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து இந்த வெங்காயம் தக்காளி இரண்டிற்கும் தேவையான அளவு உப்பை ஒருமுறை நன்றாக கலந்து விடுங்கள்.
– Advertisement –
பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயையும் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் இரண்டையும் சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு மூன்று நிமிடம் வேக விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல், தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை, சீரகம், மிளகாய் தூள் இவற்றை சேர்த்து இதனுடன் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
புடலங்காய் முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த சமயத்தில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இரண்டை நிமிடம் கழித்து மசாலா அரைத்த சாரில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதையும் ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாடை சென்ற பிறகு கூடுதலாக தண்ணீர் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைக்க வேண்டும். இது கொதிக்க கொதிக்க திக்கான பதத்திற்கு மாறும் என்பதால் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் தண்ணீரை ஊற்றி கொள்ளலாம்.
தண்ணீர் வற்றி மசாலா பதத்திற்கு வந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் மசாலா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:இனிப்பு இட்லி செய்முறைபிடிக்காத காய்கறிகளை எப்பொழுதும் வழக்கம் போல் செய்து தராமல் சற்று வித்தியாசமாக வேறு சுவையில் செய்து கொடுக்கும் பொழுது அதை ருசிக்கலாம் என்ற எண்ணமும் வரும், அதை சாப்பிடும் பொழுது அந்த ருசியில் மெய்மறந்து அந்த காய்கறிகளை தங்களை மறந்து உண்ணவும் ஆரம்பிப்பார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam