சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை | sathu niraintha instant dosa

சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை | sathu niraintha instant dosa

Qries

– Advertisement –

கால்சியம் சத்து, இரும்பு சத்து, புரோட்டீன் என்று எல்லா சத்துக்களும் அள்ள அள்ள குறையாமல் தரக்கூடிய இந்த பொருட்களை வைத்து சத்துள்ள தோசை செய்து பாருங்கள், ஆரோக்கியம் பலமாகும். இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த ஸ்பெஷல் சத்து தோசை செய்வதற்கு அதிக பொருள்களும் தேவையில்லை! எப்படி சத்துள்ள இத்தோசை தயார் செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சத்துள்ள பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள் :
தரமான இட்லி அரிசி – இரண்டு கப்
முழு கருப்பு உளுந்து – ஒரு கப்
வெள்ளை கொண்டை கடலை – ஒரு கப்
பச்சைப் பயறு – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சத்துள்ள பெசரட்டு தோசை செய்முறை விளக்கம் :
பெசரட்டு தோசை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தரமான இட்லி அரிசியாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை கொண்டை கடலை, பச்சைப் பயறு, முழு கருப்பு உளுந்து ஆகியவற்றையும் வாங்கி வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
– Advertisement –

மேற்கூறிய அளவின்படி எல்லா பொருட்களையும் ஒரு ஒரு கப் எடுத்து, அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு கப் இட்லி அரிசியையும் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் சுத்தம் செய்த பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விட வேண்டும். எட்டு மணி நேரம் இரவு முழுவதும் ஊறிய பின்பு காலையில் எழுந்ததும் தோசை வார்க்க மிக்சர் ஜாரை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்துள்ள பொருட்களை தண்ணீரை வடித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்சர் ஜாரில் சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிரைண்டரில் அரைத்தால் இன்னும் சுலபமாக இருக்கும். அரைத்து எடுத்த இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே இன்ஸ்டன்ட் ஆக தோசை வார்த்துக் கொள்ளலாம். அடுப்பில் தோசை கல்லை வைத்து காய விடுங்கள். சூடான கல்லில் ஒன்றை கரண்டி மாவை எடுத்து எவ்வளவு மெல்லியதாக பரப்பி விட முடியுமோ, அவ்வளவு மெலிதாக பரப்பி விடுங்கள். இது மொறு மொறு என்று கிரிஸ்பியாக நைஸ் தோசை போல வராது, அடை தோசை போல கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். அதனால் மெல்லியதாக பரப்பி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாற வேண்டியது தான்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:மார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு
இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த தோசை மாவில் சேர்க்கப்பட்டுள்ள எல்லா பொருட்களும் சத்துக்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய பொருட்கள் ஆகும். பலகீனமானவர்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் போன்றவர்களுக்கு அடிக்கடி இந்த தோசையை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களை ரொம்பவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதை செய்ய பெரிதாக எந்த பொருட்களும் தேவைப்படாது. புளிக்கும் வரை காத்திருக்கவும், செய்ய வேண்டிய அவசியம் இல்லை, எனவே இன்ஸ்டன்டாக ஆரோக்கியம் நிறைந்த இந்த சுவையுள்ள தோசையை அடிக்கடி செய்து கொடுத்து அசத்துங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top