– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காண கூடிய நாளாக இருக்கும். நினைத்த காரியங்களை நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். முன்கோபத்தை குறைத்து, பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் மேல் அதிகாரிகளாக இருந்தால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். மனநிறைவை அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வீட்டில் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பக்தி இரட்டிப்பாக வெளிப்படும், கோவில் குளங்களுக்கு குடும்பத்தோடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. இதனுடன் வேலையும், தொழிலும் நல்லபடியாக நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கூடக்கூடிய நாளாக இருக்கும். பட்டம் பதவி உங்களை தேடி வரும். மரியாதை தேடி வரும். தலைக்குனிந்த இடத்தில் நிமிர்ந்து நிற்பீர்கள். தவறு என்று சொன்ன விஷயங்களை எல்லாம் நீங்களே திருத்திக் கொள்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு நிறைய பக்குவம் கிடைக்கும். நிறைய அனுபவங்கள் கிடைக்கும் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு வேளையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. சொன்ன நேரத்திற்கு ஒரு வேலையை முடித்து தருவதாக இருந்தால் மட்டும் வாக்கு கொடுங்கள். இல்லை என்றால் வாக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய கடமைகளை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் கூடக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். புதுசாக நகை வாங்கலாம், அல்லது வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழலாம். லாபம் இருக்கும். சந்தோஷம் இருக்கும். செய்யும் வேலையில் திருப்தி இருக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தை எப்படி விரிவுபடுத்தலாம் என்று சிந்தித்து செயல்பட்டு, நிறைய விஷயங்களை தேடி கண்டுபிடித்து, அறிமுகம் செய்வீர்கள். திறமைகள் வெளிப்படும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி காண்பீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற டென்ஷன் அலைச்சலால் வேலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். புது முயற்சிகளை என்ற மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத பணம் வசூல் ஆகும். உங்களுடைய கடன் பிரச்சனையை தீர்த்துக் கொள்வீர்கள். வங்கியில் இருக்கும் நகைகளை மீட்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சொத்து சுகத்தை அடமானத்திலிருந்து மீட்கலாம். இப்படி நிறைய நன்மைகள் நிதி சார்ந்த வகையில் உங்களுக்கு நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருப்பீர்கள். அடுத்தவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டினாலும், அந்த சூழ்ச்சியில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். நண்பர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய சுய ரூபம் இன்று தெரிந்துவிடும். வேலை செய்யும் இடத்தில் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தில் மூன்றாவது மனிதரை முழுசாக நம்ப கூடாது. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சோர்ந்து போய் இருப்பீர்கள். வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய மாட்டீர்கள். நாளைக்கு செய்யலாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவீர்கள். ஆனால் இது ரொம்பவும் தவறு. உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, வேலையில் ஆர்வம் காட்டவும். இல்லை என்றால் நாளைய தினம் கஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிரிகளை சமாளிப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். மன பயம் இருக்காது. மேலதிகாரிகளோடு இப்படித்தான் பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்காது. மனதிற்கு பட்டதை செய்வீர்கள் அடுத்தவர்களைப் பற்றி கவலை கொள்ள மாட்டீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும் நிம்மதி பிறக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அலைச்சல் நீங்கும். நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நிதி நிலைமை சீராகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்வீர்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam