– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொலைபேசியின் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ ஒரு நல்ல செய்தி வரப்போகிறது. அந்த நல்ல செய்தி உங்களுக்கு பெரிய அளவில் மன மகிழ்ச்சியை கொடுக்கும். பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். உற்சாகத்தோடு இந்த நாளை துவங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற வம்பு வழக்குகள் உங்களை விட்டு தானாக விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு, பரிசு மழை பொழிய வாய்ப்புகள் இருக்கிறது. அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் அடிக்கும். எப்போதோ செய்து வைத்திருந்த முதலீட்டில் இருந்து நல்ல லாபத்தை பெறுவீர்கள். அடமானத்தில் வைத்த தங்க நகைகளை மீட்க, வாங்கிய கடனை திருப்பித் தர நல்ல காலம் பிறக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் அதிகமான ஆர்வம் இருக்கும். புது விஷயங்களை சீக்கிரமாக கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் திறமை வெளிப்படும் நாளாக அமையும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பவர்களுடைய ஆசை நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். சிக்கலில் சிக்கிக் கொள்ளக்கூடிய விஷயத்தை கூட, சுலபமாக சரி செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அன்பு வெளிப்படக்கூடிய நாள். இன்று வேலை தொழிலில் எல்லாம் நிறைய சாதிக்க நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உழைப்பு உழைப்பு உழைப்பு என்று இருப்பீர்கள். கூடுதல் உழைப்பு உங்களுக்கான முன்னேற்றத்தை லாபத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். கூடவே நல்ல பெயரையும் கொடுக்கும். ப்ரோமோஷன்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். சொத்து சுகம் நகை வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளால் நல்லது நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்க்கை கிடைக்கும். பெரிய அளவில் உபச்சாரம் கிடைக்கும். உறவுகளுக்கு இடையே சுமூகமான மனநிலை நிலவும். நீங்கள் சென்ற இடமெல்லாம் உங்களுக்கான புகழ்ச்சி மேலோங்கும். வேலை தொழிலில் எல்லாம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சண்டைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். எதிரிகள் எல்லாம் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். மன நிம்மதி இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று நன்மை நடக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். உறவுகளோடு சந்தோஷமாக பேசி பழகுவார்கள். உற்சாகம் இரட்டிப்பாகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேளையில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் உபாதைகள் இருக்கும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்கள் பேச்சை அனுசரணையோடு கேளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத மறதி பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் படிப்படியாக குறையும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam