– Advertisement –
நம்மில் பலர் தினமும் காலையிலும் இரவிலும் டிபன் வகைகளையே சாப்பிடுகிறோம். அந்த டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி செய்யும் வழக்கமும் இருக்கும். தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி என்று எப்பொழுதும் செய்த சட்னியை திரும்பத் திரும்ப செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். இதனால் ஒரு வித சலிப்பு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட சமயத்தில் மிளகாய் பஜ்ஜி செய்வதற்காக உபயோகப்படும் மிளகாய் வைத்து அருமையான சுவையில் பஜ்ஜி மிளகாய் சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 3,தக்காளி – 3,பஜ்ஜி மிளகாய் – 2,பூண்டு – 4 பல்,கருவேப்பிலை – ஒரு கொத்து,கடுகு – ஒரு டீஸ்பூன்,உளுந்து – ஒரு டீஸ்பூன்,எண்ணெய் – 2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தக்காளியையும் கழுவி ஒரு தக்காளியை எட்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜிக்கு போடக்கூடிய மிளகாயை நீளமான மிளகாயாக இரண்டு மிளகாய் எடுத்து அதையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் முதலில் வெங்காயத்தையும் பிறகு பூண்டையும் சேர்த்து வதக்க ஆரம்பிக்க வேண்டும். வெங்காயமும் பூண்டும் வதங்க ஆரம்பித்ததும் இதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி லேசாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் பஜ்ஜி மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
இந்த சட்னிக்கு காரணம் தரக்கூடியது அந்த மிளகாய் மட்டும்தான் வேறு எதுவும் இதில் நாம் சேர்க்கப் போவது இல்லை. காரம் சற்று அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்களோ அல்லது குறைவாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்களோ அதற்கேற்றது போல் மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சட்னியை தயார் செய்து கொள்ளுங்கள். அரைத்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு அடுப்பை அணைத்துவிட்டு கருவேப்பிலையை சேர்த்துசட்னியில் ஊற்றி விட வேண்டும். சுவையான பஜ்ஜி மிளகாய் சட்னி தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:முட்டைகோஸ் பக்கோடா செய்முறை
குடைமிளகாயைப் போலவே இந்த மிளகாயிலும் விட்டமின் சி சத்து அதிகமாகவே இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும் என்பதால் இந்த முறையில் நாம் சட்னி செய்து கொடுக்க வித்தியாசமான சுவையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam