– Advertisement –
நம்முடைய தமிழர்களின் உணவு முறைகளில் மிகவும் முக்கியமான ஒரு குழம்பு வகையாக திகழ்வதுதான் ரசம். அன்றைய காலத்தில் தினமும் ரசம் என்பது அவர்களுடைய மதிய உணவில் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இதில் சேர்க்கக்கூடிய மருத்துவ குணமிகுந்த மிளகு, சீரகம், பூண்டு போன்றவை ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் ரசம் என்றாலே அது விஷம் என்று கூறும் அளவிற்கு பலரும் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள்.
மேலும் ரசம் வைக்கும் பொழுது யாரும் சாப்பிடாமல் கீழே ஊற்றக்கூடிய நிலை என்பது ஏற்பட்டு விடும். இப்படி ஆகாமல் இருப்பதற்கும் ரசம் தனியாக சாதம் தனியாக செய்யாமல் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் ஒரே முறையில் குக்கரில் ரசம் சாதம் செய்தோம் என்றால் எதுவும் மீதம் ஆகாது. குக்கரில் எப்படி ரசம் சாதம் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்துவரம்பருப்பு – 1/2 கப்புளி – ஒரு எலுமிச்சை அளவுசீரகம் – 1/2 டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்தக்காளி – 2காய்ந்த மிளகாய் – 3பூண்டு – 6 பல்வெந்தயம் – 4எண்ணெய் – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுகருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீரை நீக்கி விடுங்கள். பிறகு இதில் நான்கு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அரிசி பருப்பை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் புளியையும் எடுத்து கொட்டை இல்லாமல் நீக்கிவிட்டு அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அடுத்ததாக நம்முடைய வீட்டில் இடி கல் இருக்கும் அல்லவா? அந்த இடிகல்லை எடுத்து அதில் முதலில் மிளகு மற்றும் சீரகத்தைப் போட்டு இடிக்க வேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, வெந்தயம் இவற்றை சேர்த்து இடிக்க வேண்டும். இது நைசாக பொடியாகக் கூடாது என்பதால் தான் மிக்ஸியில் போடாமல் இடிகல்லில் இடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் நாம் இடித்து வைத்திருக்கும் மிளகு சீரகத்தை சேர்க்க வேண்டும். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியையும் சேர்த்து சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –
தக்காளி வதங்க ஆரம்பித்ததும் இதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து நாம் ஊற வைத்திருக்கும் புளியையும் கரைத்து அதில் ஊற்றி விட வேண்டும். அடுத்ததாக நாம் ஏற்கனவே அரிசி பருப்பு ஊற வைத்திருப்போம் அல்லவா? ஊறவைத்த தண்ணீருடன் அரிசி பருப்பையும் இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். கூடுதலாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பிறகு இதற்கு மேல் சிறிதளவு மட்டும் கொத்தமல்லி தழையை தூவி குக்கரில் மூடியை வைத்து மூடிவிட வேண்டும். மூன்றிலிருந்து நான்கு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முற்றிலுமாக நீங்கிய பிறகு குக்கரின் மூடியை திறந்து மீதம் இருக்கக்கூடிய கொத்தமல்லி தழையை அதன் மேல் தூவி நன்றாக கலந்து விட வேண்டும்.
ரசம் சாதம் சற்று குழைவாகவும் கொல கொலவென்று இருந்தால் தான் நன்றாக இருக்கும். ஒருவேளை தண்ணீர் பற்றவில்லை என்னும் பட்சத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இந்த சாதத்துடன் ஊற்றி நன்றாக கலந்து விடலாம். மிகவும் சுவையான குக்கரில் செய்யப்பட்ட ரசம் சாதம் தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:காலிஃப்ளவர் 65 டிப்ஸ்
இந்த முறையில் நாம் ரசம் சாதம் செய்து தரும்பொழுது வீட்டில் இருக்கக்கூடிய சிறு குழந்தைகள் முதற் கொண்டு பெரியவர்கள் வரை எந்தவித வெறுப்பும் காட்டாமல் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய நேரமும் மிச்சமாகும். ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam