சைவ இறால் தொக்கு செய்முறை | veg prawn gravy preparation in tamil

சைவ இறால் தொக்கு செய்முறை | veg prawn gravy preparation in tamil

Qries

– Advertisement –

சைவத்தை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அசைவ சுவையில் பல விதங்களில் பல பொருட்களை வைத்து சமையல் செய்து கொடுத்தால் அதன் சுவையில் அவர்கள் மெய் மறந்தே போவார்கள். அவர்கள் மட்டுமல்ல அசைவம் சாப்பிடுபவர்களும் இதை சாப்பிட்டார்கள் என்றால் அசைவத்திற்கும் சைவத்திற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று கூறும் அளவிற்கு சுவையும் அற்புதமாக இருக்கும்.
இப்படி சைவ மீன் வருவல், சைவ கறிக்குழம்பு, சைவ மட்டன் கோலா, சைவ ஆம்லெட், சைவ ஈரல் பொரியல் என்று பல அசைவ உணவுகளை சைவத்தில் சமைக்கலாம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சைவ இறால் தொக்கு எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
பன்னீர் – 100 கிராம்,வெள்ளை கொண்டை கடலை – 150 கிராம்,மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,மைதா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – ஒன்று,தக்காளி – 2,இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு,கருவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் வெள்ளை கொண்டை கடலையை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊற வைத்திருந்த கொண்டை கடலையை அதில் சேர்க்க வேண்டும். பிறகு பன்னீரை நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் அரை டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூளை சேர்த்து, கடலை மாவையும், மைதா மாவையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

தேவைப்படும் பட்சத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் மட்டும் தண்ணீரை சேர்த்து பிணைந்து கொள்ளலாம். அதிகளவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதை நன்றாக பிணைந்து மிருதுவான மாவாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நீல வாக்கில் உருட்டி அதில் கத்தியை பயன்படுத்தி இறால் போல நடுவில் லேசாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்படி அனைத்து மாவையும் இறால் வடிவத்தில் தயார் செய்து அதை சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து இறாலை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு லேசாக சிவக்கும் வரை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயிலேயே பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மீதம் இருக்கும் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் கால் டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் இறாலை அந்த தொக்கில் போட்டு இறால் நன்றாக தொக்கை உரியும் அளவிற்கு பிரட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் இறால் அந்த தொக்கை அனைத்தையும் உரிந்து விடும். இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லியை தூவி இறக்கினோம் என்றால் சுவையான சைவ இறால் தொக்கு தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே:சுவையான காலிஃப்ளவர் கிரேவி செய்முறை
சைவத்திலும் அசைவ சுவையில் பல வகையான உணவுப் பொருட்களை செய்ய முடியும். சைவ பிரியர்களுக்கு இப்படி ஒரு முறை செய்துகொடுத்து பாருங்கள். அல்லது விரதம் இருக்கும் நாட்களில் செய்து கொடுத்தோம் என்றால் அசைவ பிரியர்கள் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top