
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்தில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சேர்க்கைக்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் தொல்லைகள் உங்களை விட்டு தானாக விளக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். வாடகைக்கு வீடு தேடுபவர்கள், இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் என்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சந்தோஷம் பிறக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றம் பெரிய அளவில் இலாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கடனில் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லாம் இன்று நல்லதொரு தீர்வை கடவுள் காட்டிக் கொடுப்பான்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காத சூழ்நிலை உண்டாகும். உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நிம்மதியை தரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனமகழ்ச்சி இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வேளையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் மந்தமான சூழ்நிலையை உண்டாகும். முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அடம் பிடிக்காதீர்கள். அகலக்கால் வைக்காதீர்கள். தெரியாத விஷயங்களை செய்யவே கூடாது. தெரியாத விஷயங்களை இன்று நீங்கள் பேசவே கூடாது. அப்போதுதான் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் சண்டைகள் நிறைந்த நாளாக தான் இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் இருக்கும். குறித்த நேரத்தில் குறித்த வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும். இந்த நாளில் சிரமங்களை சமாளிக்க கூடுதலாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் எதிர்பார்த்த அளவிற்கு நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த, உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். கடமைகளை எல்லாம் சரிவர நடத்தி முடிப்பீர்கள். கடன் சுமையை குறைத்துக் கொள்வீர்கள். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து நல்ல பெயரும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய சம்பாத்தியம் இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத பணம் கையை வந்து சேரும். மன நிம்மதி பெறுவீர்கள். முதலீட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து சுகம் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் பழுதான விஷயங்களை எல்லாம், பார்த்து பார்த்து சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணைத் தேவையை பூர்த்தி செய்து வைப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகள் எந்த தடைகளும் இல்லாமல் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக டென்ஷன் இருக்காது. குடும்ப உறவுகளிடத்தில் ஒற்றுமை இருக்கும். சந்தோஷம் பெருகும். இன்று மாலை சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நல்ல வேலைகளில் உங்களுடைய மனதை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கடமை தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். எதையோ ஒன்றை சாதித்தது போல திருப்தியும் இருக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராகும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam