
– Advertisement –
பொதுவாக சரியாக பல் துலக்காதவர்களுக்கும், அதிகம் இனிப்பு பண்டம் சாப்பிடுபவர்களுக்கும் பல் சொத்தை உருவாகிறது. பற்களில் படிந்துள்ள பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி பற்களை சிதைக்கிறது. சிறு புள்ளியாக தோன்றி நாளடைவில் பற்களை சிதைத்து குழி போல் செய்து விடுகிறது. சொத்தை ஏற்பட்டால் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது பல்லில் கூச்சம் ஏற்படும். இது தான் முதல் அறிகுறி ஆகும்.
பற்களில் உணர்திறன் அதிகரிக்கும். பல் துலக்கிய பின்பும் கருப்பு புள்ளிகள் தென்படும். இனிப்பு சாப்பிட்டாலும் பற்கூச்சம் மற்றும் வலி ஏற்படும். பல் சொத்தை சரியாக, இயற்கையான முறையில் என்ன செய்யலாம்? அதிலிருந்து நிவாரணம் காண்பது எப்படி? பல் சொத்தை வராமல் தடுப்பது எப்படி? என்பது போன்ற பல் தொடர்பான ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
– Advertisement –
பல் சொத்தை ஏற்பட்ட பின்பு உடனே அதை மருத்துவரிடம் காண்பித்து பிடுங்கி போட்டு விடுகிறோம். கடவுள் இயற்கையாகவே மனிதனுக்கு ஒரு வரத்தை அளித்துள்ளார். மனிதனுடைய உறுப்புகள் சிறு சிறு பிரச்சனைகளுக்கு உட்பட்டால், அதை இயற்கையாகவே சரி செய்து கொள்ள முடியும். நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் நமக்கு முக்கியமானது எனவே அதை அவசரப்பட்டு இழக்க வேண்டாம்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிகமாக இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு விடுகின்றனர். சரியாக பல் துலக்குவதும் இல்லை, இதனால் அவர்களுக்கு சீக்கிரம் பல் சொத்தை உண்டாகி விடுகிறது. குழந்தைகளுக்கு ஒவ்வொரு பல்லும் ரொம்பவும் முக்கியம். பல் சொத்தை ஆரம்பித்த உடனேயே ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் இரவு பற்பசையை பயன்படுத்தி பல்லை சுத்தம் செய்ய சொல்ல வேண்டும்.
– Advertisement –
காலையில் பல் துலக்கிய பின்பு உப்பு நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பை கலந்து இரண்டு நிமிடம் வாயை நன்கு கொப்பளித்து துப்ப வேண்டும். இதனால் சொத்தை பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும். இரவு நேரத்தில் பல் துலக்கிய பின்பு இந்த மூலிகையை பயன்படுத்தி சொத்தை இருக்கும் இடத்தில் அழுத்தி வைக்க வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்று கேட்டு வாங்கி வாருங்கள். இந்த கடுக்காயை தோல் நீக்கி இடித்து பவுடர் போல பொடியாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் பொடி கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இந்த பொடியை பல் சொத்தை இருக்கும் இடங்களில் நன்கு அழுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், பல் சொத்தை மறைந்து இயற்கையான முறையிலேயே நம் பற்கள் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். பெரியவர்களாக இருந்தாலும் பல் சொத்தை ஏற்பட்ட பின்பு அதன் அறிகுறிகள் தெரியும் பொழுதே கடுக்காய் பொடியை பயன்படுத்துங்கள். மேலும் பல் சொத்தைக்கு கிராம்பு நல்ல மருந்தாகும். சொத்தை இருக்கும் இடத்தில் கிராம்பை வைத்தால் அல்லது கிராம்பு பொடியை வைத்தால் நல்ல நிவாரணம் உடனே கிடைக்கும். தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட சொத்தை சரியாகும். நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வரலாம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam