
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் நினைத்த காரியங்களை நடத்தி முடிக்காமல் விடவே மாட்டீங்க. அயராது உழைப்பீர்கள். ரொம்ப நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களை தேடி வரும். வீட்டில் நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். நேரத்தை அனாவசியமாக வீணாக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கொஞ்சம் வீண் செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, ஜாக்கிரதை. தினமும் வீட்டில் மகாலட்சுமியை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். எவ்வளவு சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள், அமையக்கூடிய வாரமாக இருக்கும். மன அழுத்தம் நீங்கும். உடல் உபாதைகள் சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. கால பைரவர் வழிபாடு உங்களுக்கு கஷ்டங்களை நீக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமையில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம். பொறுமை காக்கவும். மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக அமையும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் துவக்கத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம், கொஞ்சம் கஷ்டம் வந்தாலும், இந்த வார இறுதியில் நீங்கள் நினைத்த நல்லது நடந்துவிடும். ஆகவே வார துவக்கத்தில் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. மூன்றாவது நபரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தினமும் ஈசனை வழிபாடு செய்வது நன்மையை தரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகமாக இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். உங்களைப் பார்த்து ஏளனமாக பேசியவர் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழ்நிலைகள் அமையும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். திறமைகளை வளர்த்துக் கொண்டால், எதற்கும் பயப்படத் தேவையில்லை. அதற்கு நீங்களே உதாரணமாக இருப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிதிநிலைமை சீராகும். உங்களால் முடிந்த உதவியை ஊனமுற்றவர்களுக்கு செய்யுங்கள் மேலும் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிரம்பி வழிய கூடிய வாரமாக இருக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். சுப செலவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் செய்யக்கூடாது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கடனுக்கு விற்பனை செய்யாதீங்க. அகலக்கால் வைக்க வேண்டாம். செய்யும் வேலையை சீராக செய்தாலே போதும். இந்த வாரம் தேவையற்ற நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தினமும் வீதியில் திறியும் நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை போடுங்கள் நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் யோசனைகள் கொஞ்சம் தாறுமாறாக இருக்கும். புத்தி தடுமாறும். குறுக்கு வழியில் செல்லலாமா, என்று யோசிக்கும். ஆனாலும் காரிய தடை எதுவும் வராது. குழப்பத்தோடு நீங்கள் செய்யும் காரியம், வெற்றியைத் தரும். அதற்கு காரணம் நீங்கள் செய்த புண்ணியம். மனதை நேர் வழியில் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லாதீங்க. இந்த வாரம் முழுவதும் நேர்மையாக நடந்து கொண்டால் வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மனதை ஒருநிலைப்படுத்த குலதெய்வத்தை நினைத்து தினமும் காலையில் 10 நிமிடம் தியானத்தில் இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பெரிய பெரிய பிளான் இருக்கும். எப்படியாவது இதை சாதித்து விடலாம். அடுத்த வருடமே பெரிய பணக்காரராகலாம் என்று பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில தடைகள், சில சங்கடங்கள் உங்களுக்கு என்றே வரும். ஆனாலும் அதையெல்லாம் தகர்த்துவிட்டு வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது என்பது மட்டும் தான் உங்களுடைய குறிக்கோளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்களும் உறவுகளும் துணையாக நிற்பார்கள். பயப்படவே வேண்டாம். வியாபாரம் வேலை எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். தினமும் விநாயகரை வழிபடுங்கள். தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் இழுபறியான வாரமாக இருக்கும். முதல் முறை முயற்சி செய்யும்போது, வெற்றியடைய முடியாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் போது வெற்றி தானாக உங்கள் பக்கத்தில் வந்துவிடும். விடாமுயற்சியே இந்த வாரம் உங்களது தாரக மந்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு கேடு நினைக்கக் கூடாது. பொறாமை குணம் வரக்கூடாது. அடுத்தவர்களை பார்த்து நாமும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று எண்ணக்கூடாது. இந்த மூன்று விஷயங்களை கடைபிடித்தாலே, இந்த வாரம் உங்களுக்கான நல்லது நடக்கும். உங்களால் முடிந்த அளவு பசு மாட்டிற்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். மனநிலை சீராகும்.
மகரம்
மகர ராசிக்காரரை பொறுத்தவரை இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். திறமை வெளிப்படும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வாரத்தை பொருத்தவரை நிதி நிலைமையும் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நிறைய நல்ல விஷயங்களை இந்த வாரம் நீங்கள் எதிர்கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்களும் கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு, பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பமான மனநிலை இருக்கும். எந்த பிரச்சனைக்கு எந்த தீர்வு எடுப்பது என்று புரியாது. முயற்சிகள் சில தோல்வியில் முடியும். மேலதிகாரிகளுடைய தொந்தரவு இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நல்லபடியாக நடக்கும். ஆனால் பார்ட்னரோடு சில வாக்குவாதங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடி வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் வாராஹியை நினைத்து மனதளவில் வழிபாடு செய்யுங்கள் குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல், நிறைந்த வாரமாக இருக்கும். வேலையிலும் டென்ஷன் இருக்கும். மேலதிகாரிகளுடைய தொல்லை இருக்கும். இதிலிருந்து எப்படிடா விடுபடுவது என்று யோசிப்பீங்க. கவலைப்படாதீங்க இறைவனின் அருள் ஆசி உங்களுக்கு இருக்கிறது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானம் மட்டும்தான் உங்களை உயர்த்தி தரும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam