பிரதோஷ நாளன்று கூற வேண்டிய சிவ மந்திரம்

பிரதோஷ நாளன்று கூற வேண்டிய சிவ மந்திரம்

Qries

– Advertisement –

எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபட்டாலும், எந்த வேண்டுதலுக்காக வழிபட்டாலும், எந்த தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்று வழிபட்டாலும் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கிறது. அந்த வகையில் பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சிவ மந்திரம்
அழிக்கும் கடவுளாக திகழக்கூடியவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தரக்கூடியவராக தான் இவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். எப்படி இந்த உலகத்திற்கும் ஏற்படக்கூடிய கஷ்டத்திலிருந்து காப்பாற்றினாரோ அதேபோல் அன்றைய தினம் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும் பட்சத்தில் நமக்கு வரக்கூடிய கஷ்டங்களையும் அவர் ஏற்றுக் கொண்டு நம்மை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது.
– Advertisement –

அன்றைய தினத்தில் நாம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்வோம். அது மிகவும் சிறப்பு ஏனெனில் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அங்கு அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருப்பார்கள் என்றும், அதன் மூலம் அந்த தெய்வங்கள் அனைவரின் அருளையும் நம்மால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதோஷ நாளன்று நாம் மிகவும் எளிமையான முறையில் சிவபெருமானை வழிபாடு செய்யலாம். அந்த வழிபாட்டை தான் நம் மந்திர வழிபாடு என்று கூறுகிறோம்.
பலரும் தங்களுக்கு தெரிந்த சிவ மந்திரமான பஞ்சாட்சர மந்திரத்தை கூறுவார்கள். பஞ்சாட்சர மந்திரத்தை கூட ஒவ்வொரு விதமாக கூறினால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சிவாயநம, நமசிவாய என்று ஐந்து விதங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை கூறலாம். இதை தவிர்த்து நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய மந்திரமாக ஒரு மந்திரம் திகழ்கிறது. இந்த மந்திரத்தை பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் 308 முறை கூற வேண்டும்.
– Advertisement –

வீட்டில் வடக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கொண்டு சிவபெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை 308 முறை கூறலாம். மாலை பிரதோஷ நேரத்தில் வீட்டில் இருந்து வழிபாடு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் காலையிலோ அல்லது இரவிலோ கூட இந்த மந்திரத்தை கூறலாம். முடிந்த அளவிற்கு பிரதோஷ நேரத்தில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. இப்படி கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தையும் சிவபெருமான் ஏற்றுக்கொள்வார் நம் வாழ்வில் ஒருவித அற்புதத்தை நிகழ்த்தி வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுவார் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
“ஓம் நமோ ருத்ராய”
இதையும் படிக்கலாமே: அன்றாடம் பணம் தரும் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மூன்றெழுத்து மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அதிசயம் நிகழும் என்றும் கஷ்டங்கள் விலகி ஓடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top