வல்லாரைக் கீரை சட்னி ரெசிபி | Vallarai keerai chutney recipe

வல்லாரைக் கீரை சட்னி ரெசிபி | Vallarai keerai chutney recipe

Qries





– Advertisement –

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தி என்பது சற்று குறைவாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. நம் மூளையில் பதிவாகும் விஷயங்கள் கால சக்கரத்தின் சுழற்சியில் சிலவை காணாமல் போய்விடுகிறது. நினைவுத்திறன் குறைவது தான் இதற்கு காரணம். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நினைவுத் திறன் அதிகரிக்கும். ஞாபக மறதி என்பது குறையும். ஞாபக சக்தி பெருக சுவையான இந்த வல்லாரை கீரை சட்னியை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
வல்லாரைக்கீரை சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
தனியா – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – எட்டு
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – தாளிக்க
வல்லாரைக்கீரை சட்னி செய்முறை விளக்கம் :
வல்லாரைக்கீரை சட்னி அரைக்க தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வல்லாரை கீரையை தண்டு நீக்கி இலைகளை மட்டும் பறித்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள வல்லாரை இலைகளை போட்டு வதக்க வேண்டும். அவை சுருங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

பின்னர் அதே வாணலியில் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் பொழுது மிதமான தீயில் அடுப்பை வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். இவை வறுபட்டதும் இவற்றுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை சேர்த்து வறுக்க வேண்டும். அவை லேசாக வதங்கியதும், ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.
கண்ணாடி பதம் வர வெங்காயம் நன்கு வதங்கியதும், நீங்கள் தனியாக எடுத்து வைத்துள்ள வல்லாரைக் கீரையையும் சேர்த்து வதக்குங்கள். பின்னர் கடைசியாக அரை கப் அளவிற்கு நறுக்கிய அல்லது துருவிய தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் வதக்கி வைத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைஸ் ஆக அரைத்து விடாதீர்கள். பின் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
– Advertisement –

இதையும் படிக்கலாமே:பணம் தரும் தை வெள்ளி பரிகாரம்
கடுகு பொரிந்து வந்ததும், ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து வையுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடிய இந்த வல்லாரைக் கீரை சட்னி சுவையில் அடிப்பொலியாக இருக்கும். அடிக்கடி எதையாவது மறந்துவிட்டு தேடுபவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் அனைவரும் இந்த வல்லாரை கீரை சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சட்னியை அடிக்கடி செய்து கொடுங்கள், நினைவுத்திறன் அதிகரித்து படிப்பிலும் கூடுதல் கவனமுடன் இருப்பார்கள்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top