
– Advertisement –
அதிகம் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த பாலக்கீரை முந்தைய காலத்தில் அதிகம் அடிக்கடி உணவில் சேர்ப்பார்கள், ஆனால் இப்போது குறைந்து வருகிறது. பலபேருக்கு இதன் அருமை தெரிவதில்லை. குழந்தைகளுக்கு உடல் வலு சேர்க்கக்கூடிய இந்த கீரையை தவறாமல் அடிக்கடி செய்து கொடுங்கள். பசலை எனப்படும் இந்த கீரையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் மார்பக புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய போலிக் அமிலம், ப்ளவனாய்டுகளும் அதிகம் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ள இந்த கீரையை வாரம் இருமுறையாவது செய்து சாப்பிடுங்கள். பாலக்கீரையை வைத்து, ஆந்திரா ஸ்டைல் பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி எப்படி செய்வது? என்பதை இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.
பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் :
பாலக்கீரை – ஒரு கட்டுபெரிய வெங்காயம் – 3பூண்டு – 10 பற்கள்மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்மல்லித்தூள் – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்புளி – சிறு நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுதாளிக்க :சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்வரமிளகாய் – இரண்டுபூண்டு – 10 பல்கருவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –
பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி செய்முறை விளக்கம் :
ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சத்து மிகுந்த பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி சேருங்கள். அதனுடன் 10 பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
காரத்திற்கு மிளகாய் தூளும் மற்றும் மல்லித்தூள் மேற்கூறியுள்ள அளவின்படி சேர்க்கவும். பின் இதனுடன் சீரகம் சேர்த்து, ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அரைக்க தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கட்டு பாலக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் வறுபட்டதும், சீரகம் போட்டு ரெண்டு வரமிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி போடுங்கள். இவை நன்கு வதங்கியதும், நீங்கள் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்
பச்சை வாசம் போக நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள பாலக்கீரை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பை சரி பார்த்து கலந்து விடுங்கள். இப்போது எண்ணெய் பிரிய பிரவுன் நிறத்திற்கு மாறும் வரை மூடி வைத்து இடையிடையே கிளறி விடுங்கள். மணக்க மணக்க ஆந்திரா ஸ்டைல் பாலக்கீரை உள்ளி காரம் தயார்! இதே மாதிரி ட்ரை பண்ணி நீங்களும் அசத்துங்க. ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அபாரமாக இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam