முட்டை தோசை ரெசிபி | Muttai dosai recipe

முட்டை தோசை ரெசிபி | Muttai dosai recipe

Qries

– Advertisement –

சாதாரணமாக செய்யும் தோசையை விட இந்த முட்டை தோசை ரொம்பவே வித்தியாசமானதாகவும், சுவை நிரம்பியதாகவும் இருக்கப் போகிறது. முட்டையுடன் சேர்த்து செய்யும் பொழுது, இந்த தோசை சாப்பிடுவதற்கு ரொம்ப விருப்பமானதாக இருக்கும். சட்னி, சாம்பார் என்று தொட்டுக்க எதுவுமே தேவையில்லை! இரண்டு தோசை சாப்பிட்டாலே வயிற்றுக்கு போதும் என்றாகிவிடும். அந்த அளவிற்கு சுவை நிரம்பிய இந்த ஆரோக்கியமான முட்டை தோசை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
முட்டை தோசை செய்ய தேவையான பொருட்கள் :
தோசை மாவு – ஒரு கப்முட்டை – இரண்டுபெரிய வெங்காயம் – ஒன்றுபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகாஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டிதேங்காய் எண்ணெய் – கால் டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – சிறிதளவுஇட்லி பொடி – ஒரு ஸ்பூன்
– Advertisement –

முட்டை தோசை செய்முறை விளக்கம் :
முட்டை தோசை செய்வதற்கு முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து துண்டு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல், சற்று கனமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாய்த்தூள் காரம் அதிகம் தராது, ஆனால் நல்ல நிறம் தரும்.
உங்களிடம் காஷ்மீரி மிளகாய் தூள் இல்லை என்றால் சாதாரண தனி மிளகாய் தூள் 1/4 ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் போதும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தோசையுடன் முட்டை சேர்ப்பதால் வாயு கோளாறுகள் ஏற்படாமல் இருக்க பெருங்காயம் சேர்க்கிறோம். பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு பிசிரி விடவும். இதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு காய விடுங்கள். கல் காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு முழு முட்டையை ஊற்றி கொஞ்சம் போல உப்பை தூவி நன்கு பரப்பி விடுங்கள். பின் அதன் மீது நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழையை தூவுங்கள். பின் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள வெங்காயத்தையும் தேவையான அளவிற்கு சேர்த்து பரப்பிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிய பரிகாரம்
பின்னர் மேலே கொஞ்சம் போல இட்லி பொடியையும் தூவி, சுற்றிலும் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மணக்க மணக்க சூப்பரான முட்டை தோசை தயார்! இந்த தோசை உடன் வெங்காயம், இட்லி பொடி எல்லாம் சேர்த்து இருப்பதால் இதற்கு சட்னியே தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். இரண்டு சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். காலையிலேயே ஹெல்தியான இந்த பிரேக்ஃபாஸ்ட் தயார் செய்து நீங்களும் அசத்துங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top