
– Advertisement –
மிகவும் உன்னதமான ராத்திரியாக திகழக் கூடியதுதான் சிவராத்திரி. சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை தான் நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் தான் சிவபெருமான் பலருக்கும் அருள்புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஜீவராசிகளும் சிவபெருமானை வணங்கிய ராத்திரிதான் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நாளில் கூற வேண்டிய ஒரு சிவ மந்திரத்தைப் பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது. அதுவும் எந்த நாளில் எப்படி கூறுகிறோம் என்பதை பொறுத்தும் அந்த பலன் என்பது வேறுபடும். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
– Advertisement –
இந்த மந்திரத்தை மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கூற வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிக்க முடிந்தவர்கள் குளித்து பூஜையில் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். ஒருவேளை குளிக்க முடியாது வயதானவர்கள் என்னும் பட்சத்தில் முகத்தை மட்டும் கழுவி விட்டு கூட இந்த மந்திரத்தை கூறலாம். பூஜையில் அமர்ந்துதான் கூற வேண்டும் என்று இல்லை. வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைதியாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம். பெண்கள் மாதவிடாய் சமயமாக இருக்கும் பட்சத்திலும் முழுமனதோடு சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தி பகவாடையும் மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை கூறினால் போதும். அடுத்த வருடம் வரக்கூடிய சிவராத்திரிக்குள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் என்பது உண்டாகும்.
இந்த மந்திரத்தை கூறும்பொழுது வெறும் வயிற்றில் கூற வேண்டும். எந்தவித உணவும் எடுப்பதற்கு முன்பாக கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு எந்த உணவை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கூற வேண்டும் என்பது மட்டுமே இந்த மந்திரத்தை கூறுவதற்குரிய நிபந்தனையாக திகழ்கிறது.
– Advertisement –
எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொண்டு சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்தி பகவானையும் மனதார நினைத்துக் கொண்டு எப்பொழுதும் நீங்கள் எங்களுடனே இருக்க வேண்டும் எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
– Advertisement –
ஓம் சிங் சிவாய நமஹ
இதையும் படிக்கலாமே:துன்பங்கள் விலக மந்திரம்
எளிமையான இந்த சிவ மந்திரத்தை மகா சிவராத்திரி நாளன்று வெறும் வயிற்றில் 27 முறை கூறுபவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam