
– Advertisement –
வீட்டில் சமைப்பவர்கள் ஒவ்வொருவருமே தாங்கள் சமைக்கக்கூடிய சமையலை அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து தர வேண்டும் என்றுதான் விருப்பமும் படுவார்கள். அந்த வகையில் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையாக திகழ்வதுதான் அசைவம். அசைவ சுவையில் சைவத்தை நாம் செய்து தந்தால் தான் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள் என்று கூட கூறலாம். அதன் அடிப்படையில் காலிப்ளவரை வைத்து அசைவ சுவையில் கிரேவி செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – ஒரு பூ,பட்டாணி – ஒரு கப்,எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,சோம்பு – 1/2 டீஸ்பூன்,சீரகம் – 1/2 டீஸ்பூன்,வெங்காயம் – 2,தக்காளி – 1,பச்சை மிளகாய் – 1,கிராம்பு – 3,ஏலக்காய் – 3,பட்டை – ஒரு துண்டு,பூண்டு – 6 பல்,இஞ்சி – ஒரு இன்ச்,முந்திரி – 7,புதினா – 10 இலைகள்,குழம்பு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்,மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரை ஸ்பூன் அளவிற்கு கல் உப்பை சேர்த்து கொதிக்கின்ற தண்ணீரை அதில் ஊற்றி ஒரு நிமிடம் மூடி போட்டு விட்டு விடுங்கள். ஒரு நிமிடம் கழித்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். காலிஃப்ளவர் நன்றாக வதங்கிய பிறகு அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை இவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் பொறிந்ததும் இதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தில் ஒன்றரை வெங்காயத்தை மட்டும் நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்க ஆரம்பித்ததும் அதில் பெரிய தக்காளியாக ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பிறகு அதில் புதினா இலையை சேர்த்து ஒரு முறை நன்றாக பிரட்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு முந்திரியையும் சேர்த்து ஒரு முறை கலந்து ஆற வைத்துவிடுங்கள்.
– Advertisement –
ஆரியபிறகு இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மீதம் இருக்கக்கூடிய எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மீதம் இருக்கக்கூடிய பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி நிறம் மாற வேண்டும். பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதையும் அதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் ஊற வைத்திருக்கும் பட்டாணியை அரைவேக்காடாக வேகவைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரையும் சேர்த்து இதில் 1 1/2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும்.
– Advertisement –
பத்து நிமிடத்தில் காலிஃப்ளவர் நன்றாக வெந்துவிடும். அதேபோல் எண்ணெயும் தனியாக பிரிந்து வந்துவிடும். தனியாக எண்ணெய் பிரிந்து வந்த பிறகு இதில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தூவி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:காளான் குழம்பு செய்முறை
இந்த முறையில் கிரேவி செய்வதன் மூலம் சப்பாத்தி, சாதம், கலவை சாதம் என்று அனைத்திற்கும் நம்மால் தொட்டுக்கொள்ள முடியும். இது அசைவ சுவையில் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam