
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் படு சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் உங்களுடைய வேலையை நீங்கள் முடித்து விடுவீர்கள். சரியான நேரத்திற்கு வீட்டுக்கு கிளம்பி விடுவீர்கள். குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்த நாளுக்கு எந்த குறையும் இல்லை. என்ஜாய்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வீட்டிற்கு ஏதாவது புதுசாக பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் வாங்குங்கள். குறைந்த விலையில் தரமான பொருள் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஃபிரண்ட்ஷிப்பை ஈசியாக பெற்று விடுவீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இந்த நாளில், வேலை வியாபாரம், எல்லாம் அது அது பாட்டுக்கு சரியாக நடக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். மனைவியிடம் பொய் சொல்ல வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் கவனம் தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. உங்களுடைய வெற்றியை அடுத்தவர்களிடம் வெள்ளந்தியாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் சக மாணவர்களோடு பழகும் போது கவனமாக இருக்க வேண்டும் தேர்வில் அக்கறை காட்டுங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு இருக்கும். எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று வேகமாக செயல்படுவீர்கள். பேருந்தில் பயணம் செய்யும்போது, இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, கூடுதல் கவனம் தேவை. அந்த இடத்தில் அவசரத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை பற்றி புறம் பேச வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக நிறைய நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். சுபகாரியத் தடைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று அதிகமாக அடுத்தவர்களை பற்றி சிந்திப்பீர்கள். இந்த வேலையை செய்தால் எதிர் வீட்டுக்காரர் என்ன சொல்லுவார், இந்த டிரஸ்ஸை போட்டால், மாமியார் திட்டுவாங்களா, இந்த பொருளை வாங்கினால் கணவர் திட்டுவாரா, என்று அதிகமாக சிந்திக்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். தேவையற்ற சிந்தனைகளை விட்டு விடுங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நேர்வழியில் நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முதலீட்டில் கவனம் தேவை. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. மனைவியிடம் பொய் சொல்லக்கூடாது. உறவுகளோடு அளவோடு பேசி பழக வேண்டும். நண்பர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தோல்வி அடைந்த நிறைய விஷயங்களை இன்று சரியாக செய்து முடிப்பீர்கள். இது நம்மால் முடியாது என்று ஏதாவது ஒரு விஷயத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தால், அந்த விஷயத்தை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் நல்லபடியாக முடியும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பணத்தை கையாள்வது, முதல் உங்களுடைய உடைமைகளை பத்திரமாக எடுத்துச் செல்வது வரை, பேருந்தில் பயணம் செய்வது முதல் பிக்பாக்கெட் காரர்களிடம் இருந்து தப்பிப்பது வரை, கவனம் தேவை ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகவும் இருக்கும். நல்ல சம்பவம் தான் நடக்கும். பயப்பட வேண்டாம். எதிர்பாராத அதிர்ஷ்டம் பண வரவை கொடுக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். தேவையற்ற கெட்டது தானாக உங்களை விட்டு விலகி விடும். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் உபாதைகள் ஏற்படும். கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். நிதி நிலைமையில் தடுமாற்றம் உண்டாகும். இறைவனை நம்புங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam