
– Advertisement –
ஒரு சிலருக்கு எடை கூட மாட்டேன் என்கிறதே என்று வருத்தப்படுவார்கள் ஆனால் உலகில் பெரும்பான்மையினர் கூடிவிட்டதே குறைய மாட்டேன் என்கிறதே என்று தான் புலம்புவார்கள் என்கிறது சர்வே! உடல் எடையை குறைப்பது சற்று சவாலான விஷயம் தான் என்றாலும், முடியாத காரியம் அல்ல! சமரசம் இல்லாமல் கஷ்டப்பட்டு ஒரு பத்து நாளைக்கு மட்டும் இதை செய்து பாருங்கள், நீங்களும் ஈசியா ஸ்லிம் ஆகலாம். எடை குறைய என்ன செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவில் அறிவோம் வாருங்கள்.
எடை குறைப்பு என்றதும் புதிதாக எதையாவது சாப்பிட வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை! நாம் அன்றாடம் செய்யும் விஷயத்தையே சற்று வித்தியாசமாக செய்து பார்க்கலாம், அவ்வளவுதான். காலையில் 6:00 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள். எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக க்ரீன் டீ சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது நல்லது.
– Advertisement –
பிறகு 8 to 9 இந்த நேரத்திற்குள் காலை உணவை முடித்தாக வேண்டும். டயட் ஃபுட் எடுக்க முடிந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாதவர்கள் இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை அல்லது ஓட்ஸ் கஞ்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த உடனேயே அதிக அளவிற்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றும் பொழுது அதிகமாக பசி எடுக்கும். எனவே ஸ்னாக்ஸ் போன்றவற்றை தவிர்த்து விட்டு மாற்றாக 11:00 மணி அளவில் வேர்க்கடலை அல்லது வேக வைத்த பயறு வகைகள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒன்றரை மணியிலிருந்து மதிய உணவு இரண்டு மணிக்குள் முடித்தாக வேண்டும். சாதாரணமாக நீங்கள் சாப்பிடும் உணவை சற்று குறைத்து சாப்பிடுங்கள். உணவில் அதிகம் காய்கறிகள் மற்றும் கீரை இருப்பது நல்லது. சாதத்தை ஒரு கப் அளவிற்கு குறைவாக வைத்துக் கொண்டு அதனுடன் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்ளுங்கள் பசிக்காது.
– Advertisement –
நான்கு மணிக்கு இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை எல்லாம் தட்டி போட்ட ருசியான மோர் குடிக்க பழகுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒரு டம்ளர் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பாதி சர்க்கரை போடுங்கள் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் எட்டரை மணிக்குள் சாப்பாட்டை முடியுங்கள். தோசை அல்லது சப்பாத்தி தலா இரண்டு என்கிற எண்ணிக்கையில் சாப்பிடலாம். அவித்த இட்லி சாப்பிட்டால் நான்கு சாப்பிடலாம் அவ்வளவுதான், அதற்கு மேல் சாப்பிடாதீர்கள். தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னர் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் பருகலாம்.
இதையும் படிக்கலாமே:இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மந்திரம்
இதில் முக்கியமான விஷயம் காலை அல்லது மாலை நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு மணி நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அப்படியும் முடியாதவர்கள் வீட்டிலேயே ஒரு மணி நேரம் கட்டாயம் கலோரியை குறைக்க ஏதேனும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை கற்றுக் கொண்டு செய்யுங்கள். இப்படி நம் அன்றாட வாழ்க்கை முறையை சற்றே மாற்றி அமைத்தால், பத்து நாளில் நிச்சயம் பத்து கிலோ எடை வரை குறைந்து விடும். இந்த பத்து நாள் சேலஞ்ச் நீங்களும் எடுத்துப் பாருங்க!
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam