இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2025

இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். பணம் சேமிக்க இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். மன நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். முன்கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மிகவும் பணிவோடு நடந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் கைவிட்டுப் போன வாய்ப்புகள் எல்லாம் மீண்டும் உங்களை வந்து சேரும். எல்லாவற்றிற்கும் காரணம் அமைதியான உங்கள் அணுகுமுறையே. நிதி நிலைமையும் சீராகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உடன் இருப்பவர்களுடைய நிலைமையை முன்னுக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொள்வீர்கள். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். நிறைய புண்ணிய காரியங்களை இன்று செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவழிபாடு இரட்டிப்பு மடங்கு நிம்மதியை மனதிற்கு கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் உங்களுடைய உற்சாகத்தில் சுறுசுறுப்பில் ஒரு குறைபாடும் இருக்காது. கண்ணும் கருத்துமாக வேலைகளை செய்து நல்ல பெயரும் வாங்குவீங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்பக் கூடாது. பிறகு ஏமாந்து விட்டு புலம்பவும் கூடாது. சொந்தம் பந்தம் நட்பு எதுவாக இருந்தாலும் இன்று ஒரு எல்லை கோட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பர்சனல் விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய அளவில் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தேவையில்லாமல் உங்கள் மீது விழுந்த பழி விளக்கும். செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்று நிச்சயம் விடிவு காலம் கிடைக்கும். பாவம் பழி விலகக் கூடிய நாளாக இன்றைய தினம் இருக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீண்ட நாள் பஞ்சாயத்து இன்று ஒரு முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று டென்ஷன் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையில் ஒரு ஈடுபாடு இருக்காது. மேற்கொள்ளும் முயற்சிகள் உடனடியாக வெற்றி அடையாது. பிரச்சனைகள் இழுபறியாக இழுத்துக் கொண்டே இருக்கும். வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம் தேவை. புதிய முதலீடு செய்வதற்கு முன்பு கொஞ்சம் சிந்திக்கவும். முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். தைரியம் வெளிப்படும். தன்னம்பிக்கை வெளிப்படும் நாளாக இருக்கும். எந்த பிரச்சினையாக வந்தாலும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு உங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். யாருக்கும் பயந்து தலைகுனிந்து நிற்க மாட்டீர்கள். மனதில் பட்டதை முகத்திற்கு நேராக பேசி பிரச்சனைகளை முடிப்பீர்கள். இது பெரிய அளவில் நன்மையை உங்களுக்கு செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் மருத்துவரை உடனடியாக பார்க்கவும். அலட்சியம் வேண்டாம். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் நல்லபடியாக செல்லும். எந்த பிரச்சனையும் இருக்காது. தேவைக்கு ஏற்ப பணப்புழக்கம் இருக்கும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை நல்லபடியாக நடக்க, வியாபாரம் நல்லபடியாக நடக்க, உங்கள் முழு முழு உழைப்பையும் முதலீடாக போடுவீங்க. கொஞ்ச நேரம் கூட இன்னைக்கு ஓய்வு எடுக்க மாட்டீங்க. எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதீத நம்பிக்கை இருக்கும். எல்லா விஷயத்தையும் சரியாகத்தான் செய்வோம் என்ற நம்பிக்கை சில பல தவறுகளை செய்ய காரணமாக இருக்கும். ஓவர் கான்ஃபிடன்ட் இருக்கக் கூடாது அல்லவா. இன்று நீங்கள் அதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் எந்த, தவறும் செய்ய மாட்டேன் என்று முழுமையாக நம்புவது வேறு. எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைவனத்தோடு நடந்து கொள்வது வேறு. இந்த இரண்டுத்திற்கும் வித்தியாசம் தெரிந்து இன்று நீங்கள் பொறுமை ஆக இருந்தால் நல்லது நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top