
– Advertisement –
காலையில் வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளிக்குச் செல்பவர்களுக்கும் சாதம் கட்டிக் கொடுத்து அனுப்பும் பொழுது, சில சமயங்களில் மீந்து போய் விடுவது உண்டு. இப்படி மீந்து போன சாதத்தை வீணாக்காமல் ரொம்பவே ருசியாக பத்தே நிமிடத்தில் அருமையான முட்டை மசாலா ரைஸ் ரெசிபி இப்படி செய்து அசத்துங்க! வாங்க முட்டை மசாலா ரைஸ் எப்படி செய்வது? என்று தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்வோம்.
முட்டை மசாலா ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுதக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்முட்டை – இரண்டுசாதம் – ஒரு கப்உப்பு – தேவையான அளவுதனி மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்கரம் மசாலா – அரை டீஸ்பூன்மிளகுத்தூள் – அரை ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்மல்லித்தழை – கைப்பிடி அளவு
– Advertisement –
முட்டை மசாலா ரைஸ் செய்முறை விளக்கம் :
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வரமிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவற்றை போட்டு தாளித்ததும், ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய ஒரு பழுத்த தக்காளி பழம் ஒன்றை சேர்த்து மசிய வதக்குங்கள். வெங்காயம், தக்காளி நன்கு மசிந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு பிரட்டி விடுங்கள்.
– Advertisement –
மசாலாக்களின் வாசம் போக ஓரிரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறுங்கள். முட்டை வெந்து திரண்டு வந்ததும், மீந்து போன சாதம் எவ்வளவு இருக்கிறதோ பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு நன்கு பிரட்டி விடுங்கள். மசாலாக்கள் அனைத்தும் சாதத்துடன் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து வர வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் அருகம்புல் விநாயகர் மந்திரம்
கடைசியாக நறுக்கிய மல்லிதிதாழையை தூவி ஒருமுறை நன்கு பிரட்டிய பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான முட்டை மசாலா ரைஸ் ரெடி! இதே அளவுகளில் நீங்களும் முட்டை மசாலா ரைஸ் தயார் செய்து பாருங்கள், உங்களுக்கும் நிச்சயம் ரொம்பவே பிடித்து போய்விடும். இதற்கு தொட்டுக்க கூட எதுவுமே தேவையில்லை, அப்படியே சுட சுட சாப்பிட்டால் சூப்பராக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam