
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயந்து விட வேண்டாம். பிரச்சனைகள், என்றைக்காக இருந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆகவே, இந்த நாளில் நீங்கள் கையில் எடுக்கும் பஞ்சாயத்து, ஒரு நல்ல முடிவுக்கு வரும். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவும் கிடைக்கும். பல நாள் பிரச்சனைகளை இன்று முடித்து விடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுபசெலவை ஏற்படுத்தும். வெளியிடங்களுக்கு ஊர் சுற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். வெயிலில் வெளியே செல்லும்போது, கவனமாக இருக்கவும். குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கப்போகிறது. தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தவறாக புரிந்து கொண்ட மேல் அதிகாரிகள் கூட உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். இன்று உங்களுடைய கடமையில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று பிசியான நாளாக இருக்கும். கூடுதல் பொறுப்பு உங்கள் கையை வந்து சேரும். வீட்டுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நிறைய வேலை செய்ய வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இருந்தாலும், அந்த வேலையிலும் ஒரு உற்சாகம் இருக்கும். சோர்விலும் ஒரு சந்தோஷம் வெளிப்படும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி ஏற்படும். வேலை பளு அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் சரியாக நடக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் பொறுப்புகளில் இருந்து நீங்கள் விலகி நிற்க மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை எல்லாம் சரி பார்ப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது, இதுபோல பொறுப்பான காரியங்களை செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். பழைய விஷயங்களை எண்ணி வருத்தப்பட்டு உட்காரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் இதன் மூலம் எந்த பிரயோஜனமும் இல்லை. உபயோகமான வேலை ஏதாவது இருந்தால் பார்க்கலாம். இருக்கும் வேலையை விட்டுவிட்டு சிந்தித்து சிந்தித்து நேரத்தை அனாவசியமாக கழித்தால் பிரச்சனை உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை எப்படி விரிவு படுத்துவது என்று அனுபவசாலிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே ஆர்வக்கோளாறில் எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் தவறு கிடையாது. எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று கட்டாயம் சொல்ல கூடாது பாத்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீங்கள் நல்ல புடவை, நல்ல பேண்ட் சர்ட் போட்டு வெளியிடங்களுக்கு சென்றால் கூட கண் திருஷ்டி விழுந்து விடும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சந்தோஷம் இருக்கும். இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சுபவரவாக இருக்கும். வீட்டில் விசேஷங்கள் நடைபெற பேச்சு வார்த்தைகள் துவங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இன்றைய நாளில் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் வராது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் பஞ்சாயத்துகளை இன்று பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம். உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்களிடையே சண்டை இருந்தால் பேசி இன்னைக்கு ஒரு முடிவை எடுத்துடுங்க. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று மனசு ஏக்கப்படும். இருந்தாலும் வரிசை கட்டி நிற்கும் வேலையை பார்க்கும் போது தூங்குவதற்கு இடம் கொடுக்க முடியாது. என்ன செய்வது. உழைப்புக்கு ஏற்ற நல்ல பெயரும் வாங்குவீங்க. கவலைப்படாதீங்க.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam