முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் | Murungai keerai urulaikilangu varuval

முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் | Murungai keerai urulaikilangu varuval

Qries

– Advertisement –

முருங்கைக் கீரையை சாதாரணமாக செய்து சாப்பிட்டாலே அவ்வளவு ருசியாக இருக்கும், அதனுடன் உருளைக்கிழங்கு வறுவல் இப்படி சேர்த்து செய்தால் சொல்லவா வேண்டும்? வித்தியாசமான முறையில் முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு வறுவல் ரொம்பவும் சுலபமாக இப்படி நீங்களும் செஞ்சு பாருங்க, ருசி பிரமாதமாக நிச்சயம் இருக்கும். இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரையில் எப்படி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்முருங்கைக்கீரை – ஒரு கப்உருளைக்கிழங்கு – கால் கிலோகடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்உளுந்து – ஒரு ஸ்பூன்பூண்டு – ஐந்துபெரிய வெங்காயம் – ஒன்றுமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமல்லித்தூள் – ஒரு ஸ்பூன்தனி மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –

முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம் :
முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கால் கிலோ உருளைக்கிழங்கை குக்கரில் இரண்டு விசில் விட்டு வேகவைத்து தோல் உரித்து எடுத்து வையுங்கள். ஒரு கப் அளவிற்கு நல்ல பச்சை பசேலென இருக்கக்கூடிய முருங்கைக்கீரை இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வையுங்கள்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வந்ததும், சீரகத்தை போடுங்கள். பின்னர் இதனுடன் ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து மைய நசுக்கி போடுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கண்ணாடி பதம் வர வதக்கி விட வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு வதக்குங்கள்.
– Advertisement –

வெங்காயம் வதங்கி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கைக் கீரை சீக்கிரம் வெந்து வருவதற்கு ஐந்து நிமிடம் மூடி போட்டு இடை இடையிடையே கிண்டி விடுங்கள். கீரை நன்கு வெந்து வந்ததும், வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை மசித்து அல்லது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தனியாத்துள், மிளகாய் தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பை சரி பார்த்து போட்டுக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:எட்டாத வெற்றியை எட்டிப் பிடிக்க வாராஹி பரிகாரம்
இப்போது மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கரண்டியால் லேசாக பிரட்டி விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போக ஐந்து நிமிடம் நன்கு பிரட்டி விட்டுக் கொண்டே இருங்கள். அவ்வளவுதான் சுவையான இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் தயார்! இந்த வறுவலை நீங்கள் எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டு சாப்பிட்டால் ரொம்பவே ருசியாக இருக்கும். முருங்கைக்கீரை இருந்தால் உடனே ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ஃபேவரிட் டிஷ் ஆக நிச்சயம் மாறிவிடும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top