இன்றைய ராசிபலன் – 24 ஏப்ரல் 2025

இன்றைய ராசிபலன் – 24 ஏப்ரல் 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் இருக்கும். இதுநாள் வரை சோம்பேறித்தனத்தோடு வியாபாரம் செய்தவர்கள் கூட, இன்று சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து நிறைய லாபம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருப்பீர்கள். இந்த நாளில் மன அமைதி கிடைக்கும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியமான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பாட்னரோடு கொஞ்சம் அனுசரித்து பேசவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. முன்பின் தெரியாத மனிதர்களிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும். அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்குகளுக்கு செல்லவே கூடாது. ஜாக்கிரதை, செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் உண்டு. வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடைய கடினமான உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். கடன் சுமை குறையும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப தலைவிகளுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டு. உடன் பிறந்தவர்களால் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மன நிம்மதி அடைவீர்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனத்தோடு இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் சொல்ல வேண்டாம். தெரியாத மூன்றாவது நபரை நம்பி எந்த ஒரு வேலையிலும் காலை வைக்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். எதையோ சாதித்தது போல ஒரு திருப்தி இருக்கும். பிரச்சனைகள் பல இருக்கும். இருந்தாலும் மனதிற்கு ஒரு நிம்மதி. பிரச்சினைகளை பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு தைரியம். இறை நம்பிக்கை உங்களை இன்று சந்தோஷமாக வளம் வர செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் உஷாராக இருப்பீர்கள். உங்களை ஏமாற்ற நினைத்தவர்கள் தான், ஏமாந்து போவார்கள். எதிரிகளுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக திகழும் நாள். இந்த நாள் இறைவனுக்கு நன்றி சொல்லவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யும் இடத்தில் எல்லாம், கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது. உறவுகளோடு போட்டி பொறாமை இருக்கக் கூடாது. வாக்குவாதம் சண்டைகள் வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. ஏதாவது முக்கியமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தயாராகி விடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு இருக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். உறவுகளோடு பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top