சம்பா ரவை தோசை செய்முறை | samba rava dosa seimurai in tamil

சம்பா ரவை தோசை செய்முறை | samba rava dosa seimurai in tamil



இன்றைய காலத்தில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்கள் பலருக்கும் சர்க்கரை நோய் என்பது இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுள் பலரும் இரவு நேரத்தில் சம்பாரவை வைத்து உப்புமா செய்து சாப்பிடுவார்கள். மற்றவர்கள் தோசையை சாப்பிடுவார்கள் இதை பார்க்கும் பொழுது தங்களுக்கும் தோசை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அரிசிமாவை சேர்ப்பதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற பயத்தில் தோசை சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் சரி தோசைக்கு மாவு இல்லாத சமயத்திலும் சம்பா ரவையை வைத்து எப்படி எளிமையான முறையில் தோசை செய்யலாம் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்சம்பா ரவை – ஒரு கப்தக்காளி – 1காய்ந்த மிளகாய் – 4சீரகம் – 1/2 ஸ்பூன்அரிசி மாவு – ஒரு ஸ்பூன்இஞ்சி – ஒரு சிறிய துண்டுஉப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு – Advertisement -செய்முறைமுதலில் சம்பா ரவையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து நல்ல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்த சம்பா ரவையை போட்டு அதனுடன் ஒரு தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், அரிசி மாவு, இஞ்சி போன்றவற்றை போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி நன்றாக கலந்து விடுங்கள். இது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் அதற்கேற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சம்பா ரவை தோசை மாவு தயாராகிவிட்டது. – Advertisement – அடுப்பில் எப்பொழுதும் போல் தோசை கல்லை வைத்து கல் காய்ந்ததும் தோசை ஊற்றி விடலாம். ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து தோசை ஊற்றி வேண்டும். பிறகு அதை சுற்றி எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து விட்டால் சுவையான ஆரோக்கியமான சம்பா ரவை தோசை தயாராக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும். இந்த முறையில் நாம் வீட்டில் இருக்கக்கூடிய சிறு குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி செய்து கொடுத்தோம் என்றால் அனைவரும் மகிழ்ச்சியுடன் விரும்பி சாப்பிடுவார்கள்.இதையும் படிக்கலாமே: முருங்கைக் கீரை உருளைக்கிழங்கு வறுவல்தோசை மாவு இல்லாத சமயத்தில் சம்பா ரவையை வைத்து 10 நிமிடத்தில் அருமையான ஆரோக்கியமான சுவையான சம்பா ரவை தோசையை தயார் செய்ய முடியும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் சமையலுக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top