
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சுப காரியங்களை இன்றைக்கு துவங்கிப் பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல விஷயங்கள் எல்லாம் இனி நல்லபடியாக நடக்கத் துவங்கும். கவலைப்படாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கைநிறைய லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேளையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷம் பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய வேலைகள் இருக்கும். ஆனாலும் உங்கள் கவனம் ஒரு துளி கூட சிதறாது. சோம்பேறித்தனம் இருக்காது. உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை வேலைகளை எல்லாம் சரியாக முடித்து விடுவீர்கள். வேலைகளை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் அளவுக்கு நேரமும் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கக்கூடிய நாள் இன்று. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். தேவையற்ற தொல்லைகள் வரும். சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன இடையூறுகள் வரத்தான் செய்யும். எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை பிரார்த்தனை செய்து, இந்த நாளை துவங்குங்கள். கடவுள் உங்களுக்கான தைரியத்தை கொடுப்பார்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்கள் இளைஞர்கள் எல்லாம் சாதனை படைக்கும் அளவுக்கு இன்று முன்னேற்றத்தை அடைவீர்கள். செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். சில பேருக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். உற்சாகம் இருக்கும். எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து, நல்ல பெயரை வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். மனநிம்மதியும் தூக்கமும் கிடைக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை தான். உங்களுக்கான நல்ல நேரம் பிறந்து விட்டது. புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்றைய நாள் சந்தோஷம் தரக்கூடிய நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள் எதிரிகளை வீழ்த்துவீர்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிள்ளைகளுடைய நலனில் பெற்றவர்கள் அதிகமாக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.மகரம்மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கும். வீட்டிலிருந்தபடியே இன்று குல தெய்வத்தை கும்பிடுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். கடன் சுமை குறையும். தேவையற்ற பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். கூடுமானவரை உடம்புக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுங்கள். உடலுக்கு சூடு தரக்கூடிய விஷயங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். பாட்னருடன் சண்டை போட வேண்டாம். பொறுமை காக்கவும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam