
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களை செய்ய துவங்கலாம். இறைவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். இன்றைய நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து கௌரவமாக நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சொன்ன வேலையை செய்து தராமல், பின்னடைந்த இடத்தில் எல்லாம் உங்களுடைய திறமை வெளிப்படும். உங்களுடைய தவறை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிலும் இன்று உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். என்ஜாய் பண்ணுவீங்க. – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பொருளாதாரத்தில் ஒரு உயர்வை அடைவீர்கள். இருந்தாலும் உங்களுடைய தன்னடக்கம் ஒருபோதும் தடுமாறாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் இந்த நாள் அழகாக நகர்ந்து செல்லும்.கடகம்கடக ராசி காரர்களுக்கு இன்று ஆளுமை திறமை அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை மிரட்டி வேலை வாங்குவீங்க. உங்களுடைய வேலை செய்வதை காட்டிலும், அடுத்தவர்களுடைய வேலையில் அதிகமாக மூக்கை நுழைப்பீர்கள். இதனாலேயே சில பல சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் என்று தப்பித்துக் கொள்ளலாம் பார்த்துக்கோங்க. – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கெட்டது நன்றாக தெரியும். பாசம் வெளிப்படும். வாழ்க்கையில் என்ன தவறு செய்தீர்கள்? எதற்காக உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை வருகிறது என்ற, தொடக்கப் புள்ளியை கண்டுபிடித்து விடுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். இன்று நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இன்று அமையும்.கன்னிகன்னி ராசிக்காரர்கள் இன்று படு சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுடைய காலில் பம்பரத்தை கட்டிக்கொண்டு வேலை செய்வீர்கள். உங்களை ஓவர் டேக் பண்ண யாராலும் முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடம் உங்களுக்கு தான். நிறைய மனக்கவலை இன்று நீங்கும். சந்தோஷமாக இந்த நாள் செல்லும். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷனை குறைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். சேமிப்பு கரையும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு இன்று குறைபாடு இல்லை.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும் பார்த்துக்கோங்க.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இன்று முதலீடு செய்ய வேண்டாம். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை பார்த்து பொறாமை பட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தெரியாத விஷயத்தில் அகல கால் வைக்க கூடாது. தேவையற்ற நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும். பண தேவை முழுமையாக பூர்த்தியாகும். பண சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை நீங்கும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். இனி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இனி சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அனுபவ பாடங்கள் கிடைக்கும்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். மனது இறை வழிபாட்டில் ஈடுபடும். புண்ணிய காரியங்களை செய்து மணமகிழ்ச்சி அடைவீர்கள்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள். உங்கள் பேச்சைக் கேட்க நாலு பேர் இருப்பாங்க. சந்தோஷமா அவர்களை வேலை வாங்கிக் கொண்டு, நீங்க ஜாலியா இருக்க போறீங்க. யாரோ அடிமை உங்களுக்கு சிக்க போறாங்க. வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மாத கடைசி கட்டம் என்பதால் பண பற்றாக்குறை வர வாய்ப்பு உள்ளது.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam