பாதுகாப்பு கவசமாக திகழும் ருத்ர மந்திரம்

பாதுகாப்பு கவசமாக திகழும் ருத்ர மந்திரம்

Qries


ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணம் அவர்களுடைய கர்ம வினைகள் என்றாலும் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் ஒருவித காரணமாகவே அமைகின்றன. அப்படிப்பட்ட கர்ம வினைகளையும், எதிர்மறை ஆற்றலையும் நீக்கக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக திகழக் கூடியவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த வித தீவினைகளும் அண்டாது என்று கூறப்படுகிறது. அதைப்போல் அவர்களுடைய கர்ம வினைகளும் படிப்படியாக நீங்கி பிறவியேற்ற நிலை உண்டாகும் என்று கூறலாம். அப்பேற்பட்ட சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் கூறவேண்டிய ஒரு ருத்ர மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பாதுகாப்பு கவசமாக திகழும் மந்திரம்சிவபெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக திகழ்வதுதான் ருத்ர மந்திரம். ருத்ர மந்திரத்தை யார் ஒருவர் முழு மனதோடு கூறுகிறார்களோ அவர்களுக்கு ருத்ர மந்திரம் ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்து அவர்களிடம் எந்தவித தோஷங்களும், எந்தவித எதிர்மறை ஆற்றலும், தீய சக்திகளும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட ஒரு ருத்ர மந்திரத்தை இப்பொழுது தெரிந்து கொள்வோம். – Advertisement -ருத்ர மந்திரத்தை உச்சரிக்க கூடிய அற்புதமான நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷம் வரக்கூடிய நாள், சோமவாரம் மற்றும் சிவராத்திரி வரக்கூடிய நாள். இவை மூன்றும் ஒரு சேர வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் ஜூன் மாதம் 23ஆம் தேதி திகழ்கிறது. அதனால் இன்றைய நாளில் நம் ருத்ர மந்திரத்தை கூற ஆரம்பிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விரைவிலேயே விலகி ஓடிவிடும். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் சொல்லலாம், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் கூறலாம், ஒவ்வொரு சிவராத்திரியிலும் சொல்லலாம். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு ஏற்றார் போல் நாம் இதை கூற வேண்டும். அனுதினமும் கூறுவதாக இருந்தாலும் கூறலாம். அதில் எந்த தவறும் கிடையாது.இந்த ருத்ர மந்திரத்தை சொல்ல தொடங்குவதற்கு முன்பாக அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது சிறிது பச்சரிசியை ஊற வைத்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இதை சிவ கோவிலில் சுற்றி இருக்கக்கூடிய மண் பகுதியில் தூவிக்கொண்டே வரவேண்டும். பிறகு சிவபெருமானிடம் சென்று வில்வ இலைகளை சமர்ப்பித்து வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த கோவில் வளாகத்திலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு மிகவும் உகந்த நேரமாக கருதப்படுவது பிரதோஷ நேரம் ஆகும். எந்த நாளில் நாம் கூறுவதாக இருந்தாலும் பிரதோஷம் நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த ருத்ர மந்திரத்தை கூறுவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். – Advertisement – மந்திரம்“ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மகா தேவாய நம”இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்கும் சுக்கிர மந்திரம்எளிமையான இந்த ருத்ர மந்திரத்தை 27 முறை பாராயணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருந்து அனைத்து விதமான தீய சக்திகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top